189. சந்தத மங்களம், மங்களமே

உன் ஆசிடை சாற்றும்
                               
பல்லவி

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

அனுபல்லவி

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா. - சந்தத

சரணங்கள்

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. - சந்தத

2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா - சந்தத

3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். - சந்தத


ராகம்: கேதாருகௌளம்
தாளம்: ரூபகதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்