8. இயேசு ஸ்வாமி, உமது


1. இயேசு ஸ்வாமி, உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம், எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச்சேர,
எங்கள் சொல்லுக்குட்படுத்தும்.

2. உமதாவி எங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசாராகில்,
புத்தி கண்ணெல்லாம் இருட்டு
சீர்ஷிண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு.

3. மகிமையின் ஜோதியே,
ஸ்வாமி, நாங்கள் மாயமற
பாடிக்கெஞ்சி, நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர,
வாய் செவி மனமுங் கண்ணும்
திறவுண்டு போகப்பண்ணும்.

 
Tobias Clausnitzer,1684