1. இயேசு ஸ்வாமியே, நீர் சொல்லும்
நானோ கவனிக்கிறேன்.
நீர் உரைக்கக் கேட்டுக் கொள்ளும்
நல் இருதயத்திலே
ஏற்றுக் கொண்டுமக்கென்றே
நான் பிழைக்கிறதற்காகப்
பலத்தை அளிப்பீராக
2. நேசரே, நீரே போதிவிக்கும்
மொழி யாவும் எனக்கு
ரட்சிப்புக்கென்றே பலிக்கும்
அத்தால் துக்கம் நீங்கிற்று.
அதொப்பற்ற பொக்கிஷம்,
தேனிலேயும் மதுரம்.
அதை நான் சந்தோஷமாகக்
கேட்டுக் கவனிப்பேனாக
3. பேயால் நான் நெருக்கமான
வழியில் கலங்கவே,
இந்தக் கோல் அல்லோ மெய்யான
திடனைக் கொடுக்குமே,
அதில் ஊன்றி அடியேன்
சிலுவை சுமக்கிறேன்.
சாவில் தெய்வசொல் ஜெயிக்கும்
பலத்தை எனக்களிக்கும்.
4. உமதுபதேசத்தாலே
என்றும் இளைப்பாறுவேன்,
அதை நான் மாவாஞ்சையாலே
நெஞ்சில் வைத்துக் காக்கிறேன்;
உம்மை அங்கே நேரிலே
கேட்கும் என்றைக்கும் அன்பாக
என்னிடத்தில் காப்பீராக.
5. என் ஜெபத்தைக் கவனியும்,
நேசமுள்ள இயேசுவே
நிலை நிற்க ஈவளியும்
அப்போதும்மை நித்தமே
எந்த நிமிஷத்திலும்
வாய் இதயத்தாலேயும்
தாழ்மையாக நான் துதிப்பேன்
போற்றி பாடித் தோத்த்திப்பேன்.
Anna Sophia, Landgräfin zu Hessen Darmastadt, †1683