1. உலகின் வாஞ்சையான
என் ஸ்வாமி இயேசுவே
நான் உம்மை ஏற்றதான
வணக்கத்துடனே
சந்திக்கச் செய்வதேன்ன.
நான் தேவரீருக்கு
செலுத்த உமக்கென்ன
பிரியமானது.
2. நீர் சேர்கையில் களிக்கும்
சீயோன் கிளைகளை
வழியிலே தெளிக்கும்;
நான் உமதுண்மையை
சங்கீதத்தால் துதிப்பேன்,
மகிழ்ச்சியுடனே
நான் உம்மை தோத்தரிப்பேன்
பெரிய கர்த்தரே.
3. நான் யாதொரு கதியும்
இல்லாதே போனோனாய்
நிர்ப்பந்தமுங் கெடியும்
நிறைந்தவனுமாய்
இருந்தபோதன்பாக
நீர் என்னை நோக்கினீர்
நீரே என் மீட்புக்காக
வெளிப்படுகிறீர்.
4. கட்டுண்ட நான் கிடந்தேன்,
நீர் கட்டவீழ்க்கிறீர்;
இகழ்ச்சியைச் சுமந்தேன்,
நீர் அதை நீக்கினீர்;
நீர் என்னை மேய்மையாக்கி,
என் ஆத்துமத்திலே
ஐஸ்வரியவானாக்கி
ரட்சிக்க வந்தீரே.
5. மகா நிர்ப்பந்தத்தாலே
அழிவதாகிய
உலகைத்தயவாலே,
நீர் பார்த்திருக்கிற
சிநேகந் தேவரீரை
அடியாரண்டைக்கு
வந்தெங்கள் கெட்ட சீரைத்
திருத்த ஏவிற்று.
6. வியாகுலம் அடைந்த
ஜனத்தின் கூட்டமே,
இக்கட்டினால் நிறைந்த
ஆதாமின் வம்சமே,
இதோ, சகாயர் வந்தார்
கர்த்தர்கெட்டோருக்கு;
அத்தால் மகிழ்ந்திரு.
7. இங்கிந்த்த் தெய்வப் பிள்ளை
இறங்க அவரை
இழுக்கத் தேவையில்லை;
தாம் தாமே உங்களை
அன்பாய்ச் சந்திப்பதற்கு
இறங்கி வந்தாரே:
ரட்சிப்பவரவர்க்குச்
சமீபமாகவே.
8. சுமந்த குற்றத்தாலே
கலங்கினோருக்கும்
இம்மானுவேலினாலே
கிலேசம் ஆறிடும்;
பாவக் கடன் செலுத்த,
நாதரைத் தம்மிலே
ஆரேக்கியப்படுத்த
வருவார் அவரே.
9. நெஞ்சே, துன்மார்க்கருக்கும்
பகைஞர் உனக்கு
உண்டாக்குந் துன்பத்துக்கும்
பயப்படாதிரு;
உன் மீட்பர் ராஜாவாக
வருகிறாரல்லோ,
அவருக்கு முன்பாக
பேய்க் கூட்டம் நிற்குமோ?
10. பொல்லதாவர்களுக்கு
மா ஆக்கினைகளும்
நல்லோரின் கூட்டத்துக்கு
அனந்த பூரிப்பும்
முடிவிலே உண்டாக
அந்நாள் வருவீரே.
அடியார் மீட்புக்காக
நீர் வாரும், இயேசுவே.
P. Gerhardt. †1676