25. இரக்கமுள்ள இயேசுவே

1. இரக்கமுள்ள இயேசுவே,
மனு ஜென்ம்மாய்த் தானே
பிறந்த உம்மைப் பாடுவோம்,
வானோரும் பாடக் கேட்கின்றோம்,
இரக்கமே.

2. ஒன்றக தேவ புத்திரர்
எங்கள் ரூபமானவர்,
ஓர் முன்னணையிலே, இதோ,
படுத்திருக்கின்றார் இப்போ.
இரக்கமே.

3. அளவில்லாத வல்லவர்
உலகத்தைத் தாங்கினர்
சிறு குழந்தையாய்த் தாயார்
மடியிலே கிடக்கின்றார்,
இரக்கமே.

4. அனாதி ஜோதி பூமிக்கே
புது ஒளி வீசுமே.
அதே இராவிருளிலும்
உதித்துப் பிரகாசிக்கும்.
இரக்கமே.

5. இந்நீசருக்கு மோட்சத்து
வாழ்வுண்டாகிறதற்குப்
புவியில் தேவ புத்திரர்
மா பரதேசியானவர்,
இரக்கமே.

6. நமக்கிரங்கி, வானத்தில்
நம்மை மாளா ஆஸ்தியில்
சம்பன்னராக்க ரட்சகர்
மகா எளியோரானவர்,
இரக்கமே.

7. மட்டற்ற தம்மன்புடைய
உட்கருத்தைக் காண்பிக்கப்
பிறந்த கிறிஸ்துக்குத் துதி,
கிறிஸ்தோரின் கூட்டமே, களி,
இரக்கமே.

M. Luther, †1546.