26. இது கர்த்தாவின் தயவால்

1. இது கர்த்தாவின் தயவால்
நாம் ஆசரிக்கும் திருநாள்.
விண்மண்ணிகலுள்ள யாவரும்
இதில் களித்துப் பாடவும்.

2. பிதாக்கள் ஆசைப்பட்டது
இன்றைக்கு நிறைவேறிற்று;
பரத்தினின்று ஆண்டவர்
குமாரனை அனுப்பினார்.

3. இவ்வற்புதம் என் புத்தியால்
அறிய முடியாததால்
நான் மௌனமாய் வணங்குவேன்
தேவன்பின் ஆழம் சிந்திப்பேன்.

4. பாவிகளுக்குக் கிருபை
கிடைக்க எங்கள் ஸ்வாபத்தை
அணிந்துகொண்டு தேவரீர்
மா ஏழையாகப் பிறந்தீர்.

5. இதோ கர்த்தாவின் நாமத்தில்,
சீயோனே. இன்றுன்னண்டையில்
உன் ராஜா வந்தார் அவரே
தோத்திரிக்கப் பட்டவரே.

6. பிதாக்கள் ஆசித்தவரே,
மெய்ச் சமாதானக் கர்த்தரே,
இம்மானுவேலே, அடியேன்
உம்மைப் பணிந்து தொழுவேன்.

7. அனைத்துக்கும் மேலான நீர்
எங்களண்டை இறங்கினீர்;
உம்மாலே மோட்சத்துக்குப்போம்.
வழியைக்கண்டு செல்லுவோம்.

8. ஓர் பாவத்தாலே மனிதர்
மா ஆக்கினைக்குட்பட்டவர்,
ஓர் மீட்பரால் ரட்சிப்புண்டாம்
எப்பாவமும் நிவர்த்தியாம்.

9. இது கர்த்தாவின் தயவால்
நாம் ஆசரிக்கும் திருநாள்
விண் மண்ணிலுள்ள யாவரும்
இதில் களித்துப் பாடவும்.

Oh.F. Gellert, †1769.