27. இதோ, ஓர் பிள்ளை. நமது

1. இதோ, ஓர் பிள்ளை. நமது
மகா மகிழ்ச்சிக்குப் பிறந்தார்;
திவ்விய மைந்தன் நமக்குப்
பிதாவால் தரப்பட்டு வந்தார்.
தேவன்பின் பொக்கிஷத்தை ஆண்டவர்
அவருக்குள் திறந்தவைக்கின்றார்.

2. இப்பிள்ளையின் முகத்திலே
பிதாவின் கிருபைவிளங்கும்.
புவியின் பொழுதவரே;
ஆதாம் விழுந்ததாலே எங்கும்
பிடித்த அந்தகாரத்தை அவர்
வெளிச்சமாக்க வந்த ரட்சகர்.

3. இப்பிள்ளை சின்னதாகியும்,
பூலோகத்தைச் சுமந்திருக்கும்
அதுதானே அனைத்திலும்
பெரிய பாரத்தை எடுக்கும்;
அவருடைய தோளின் பேரிலே
அவர் கர்த்தத்துவம் இருக்குமே.

4. இதோ, இப்பிள்ளையுடைய
பேர் நாமம் ஆச்சரியமானோர்
உலகில் அவர் பிறந்த
அதிசயத்தால் தூதாரனோர்
திகைத்து, மா மகிழ்ச்சியுடனே
கர்த்தாவைப் போற்றிப் பாடினார்களே.

5. ஆலோசனை தோன்றாவிட்டால்
ஆலோசனையின் கர்த்தராகக்
கொடுக்கப்பட்டார், ஆகையால்
உன் ஆத்தும ரட்சிப்புக்காக
உதவியாம் நற்புத்தி உன்க்கே
நீ அவரைக் கேட்டார் கிடைக்குமே

6. நற்பாதையில் நடக்கையில்
பலமும் உன்க்குக் குறைந்தால்
அஞ்கவேண்டார்; நீ அவரின்
அடைக்கலத்தைப் பெற்றுக் கொண்டால்
பலத்துக்கொள்வாய்; இந்தப் பிள்ளைதான்
மாவல்லமையுடைய தம்பிரான்

7. ஆகையினால் நீ உனது
பகைஞரோடெர்து நிற்க
பலத்தைக் தேடிக்கொண்டிரு;
அனைத்தையும் நன்றாய் முடிக்க
பலமுடைய இவர்வசமாய்
நீ ஓடிவா, அப்பொது வெல்லுவாய்

8. உன் நித்திய பிதாவானார்,
பார், உன்னைச் சுவிசேஷத்தால்
புது பிறவியாக்கினார்.
பிதாவைப்போல தயவாலே
அனந்தகாலமும் உன் ரட்சகர்
உன்மேல் கண்ணோக்கமாயிருப்பவர்.

9. மா சமாதானப் பிரபு
என்றும் அழைக்கப்பட்டோரான
இம்மானுவேல் நரருக்குப்
பிதாவுடைய இன்பமான
தயையைமீளவுஞ்சம்பாதித்தார்
அத்தால் தாழ்ந்தோரின் நெஞ்சைத் தேற்றுவார்.

10. இத்தாலே, நெஞ்சே நீ களி,
கர்த்தர் கொடுக்கிறதைப்பற்று.
மகிழ்ந்து அவரைத் துதி,
பொல்லாக்குணங்களை அகற்று.
அன்புள்ள ரட்சகரைத் தோத்திரி,
அவருக்கே நீ உன்னை ஒப்புவி.
  
J.A. Freylinghausen, †1739.