28. கர்த்தாதி கர்த்தராகிய

1. கர்த்தாதி கர்த்தராகிய
புவியின் பொழுதென்கிற
இம்மானுவேலே, உமக்குத்
துதிவரக் கடவது,
அல்லேலூயா.

2. ஆசிக்கப்பட்ட தேவரீர்
அன்பாக வந்திருக்கின்றீர்
என்றும்மைப்பாடி நாங்களும்
வானோருடன் துதிக்கவும்
அல்லேலூயா.

3. உலகுண்டான நாள் முதல்
பிதா பிதாக்களின் திரள்
உமக்கு வாஞ்சையுடனே
காத்திருந்தார்கள், ஜீவனே,
அல்லேலூயா.

4. சங்கீதங்களில் உம் மகா
அதிசயத்தைப் பாடின
தாவீது வாஞ்சையாகத்தான்
நீர் வருவதை ஆசித்தான்,
அல்லேலூயா.

5. ஆ, சீயோனிலிருந்துண்டாம்
ரட்சிப்பு வந்தால் நலமாம்,
சிறையிருப்பைக் கர்த்தர்தான்
அன்றே திருப்பாரே என்றான்.
அல்லேலூயா.

6. இப்போதும் வந்தீர், மீட்பரே.
அங்கே ஓர் முன்னணையிலே
அடியார் வாழ்வதற்கு நீர்
எளியோராய்க் கிடக்கின்றீர்,
அல்லேலூயா.

7. பரங்களை விட்டிங்கே நீர்
மா பரதேசியாகிறீர்;
வானோர் வணங்கும் உமக்குத்
தாய்ப்பாலும் தேவையாயிற்று,
அல்லேலூயா.

8. கடலுக்கெல்லையை வைத்தீர்,
இப்போ கர்த்தாவாந் தேவரீர்
துணியில் சுற்றிப் புல்லிலே
படுக்க வைக்கப்பட்டீரே,
அல்லேலூயா.

9. நரருக்காய் எத்தீங்கையும்
பொறுமையாய்ச் சகித்திடும்
உம்மாலே ஆறுதலெல்லாம்
விழுந்த எங்களுக்குண்டாம்,
அல்லேலூயா.

10. ஏரோதைப்போல உமக்கே
அநேகர் உலகத்திலே
விரோதமான துர்க்குணர்
நீரோ நரர் சிநேகிதர்
அல்லேலூயா.

11. ஆ,தேவரீரை அடியேன்
சிநேகித்தே யிருக்கின்றேன்;
இந்நேசத்தை நீர் மிகவும்
வளரப்பண்ணி யருளும்,
அல்லேலூயா.

12. அது போதாது ஆகிலும்
நீர் என்னை அன்பாய்ப் பார்த்திரும்
என்னில் உண்டான துமக்கே
ஒப்புக்கொடுத்துவிட்டேனே,
அல்லேலூயா.

13. என் பலவீனத்துக்கு நீர்,
அனுக்ரகிக்கத்தேவரீர்
தாமே இவ்வுலகத்திலே
பலவீன ரூபானீரே,
அல்லேலூயா.

14. ஆ, அந்த மாட்டுக்கொட்டிலும்
புல்லாகிய படுக்கையும்
அடியார்க்காக உமக்குப்
பிரியமாயிரந்தது,
அல்லேலூயா.

15. இந்நீசப் பாவியையும் நீர்
இரக்கமாய்க் கண்ணோக்குவீர்.
இச்செய்தி என்மனத்திலே
மா தைரியம் உண்டாக்குமே,
அல்லேலூயா.

16. நான் மிகவும் அசுத்தனும்
பொல்லாதவனுமாயினும்
பயப்படேன்; கெட்டோரையே
அழைக்கின்றீர், என் இயேசுவே
அல்லேலூயா.

17. நான் ஆக்கியைக்கென்பாவத்தால்
ஏந்நவனாயிராவிட்டால்
நீர் இந்தச்- சிறுமையிலே
பிறக்கத் தேவையில்லையே,
அல்லேலூயா.

18. திடன் கொண்டும்மைப்பற்றினேன்.
உம்மால் ரட்சிப்பை அடைவேன்
உம்மால் என் பாவஞ் சாபமும்
எல்லா இக்கட்டும் போய்விடும்
அல்லேலூயா.

19. நீர் என் தலை, நான் உமது
அவயவம், நான் உமக்கு
தேவாவியின் சகாயத்தால்
கீழ்ப்பட்டிருக்கும் வேலையாள்.
அல்லேலூயா.

20. இம்மையில் நித்த நித்தமும்
இனிப் பரத்தில் என்றைக்கும்
துதியை உமக்கடியேன்
மா பூரிப்பாய்ச் செலுத்துவேன்.
அல்லேலூயா.

P. Gerhardt, † 1676