1. கிறிஸ்தவர்களே, களித்து,
தமது குமாரனை
ஈவாய்த் தந்த கர்த்தரை
இனிதாகத் தோத்திரித்துப்
போற்றுங்கள், தயாபரர்
நமகுறவானவர்
மா மகிழ்ச்சி, தேவபிள்ளை
மீட்பரானார், பயமில்லை,
புரிப்பாவோம், அவர்தாமே
கிருபைப் பகலோனாமே.
2. ஆ, என் மனமே, நன்றாகப்
பார், உன் மீட்பர் எத்துணை
பட்சமாக உன்னண்டை
வந்திறங்கி, உனக்காக
ஏழையாய்ப் பிறக்கின்றார்,
அவர் முன்னணையைப் பார்
மா மகிழ்ச்சி, தேவபிள்ளை
மீட்பரானார், பயமில்லை,
புரிப்பாவோம், அவர்தாமே
கிருபைப் பகலோனாமே.
3. உம்மை எப்படித் துதிப்பேன்,
இயேசுவே, உம்மாலே நான்
மீட்கப்பட்டேன் என்றுதான்
செய்கையாலே அறிவிப்பேன்
உம்மால் தேற எம்மிலே
தாவரிப்பேன், ஜீவனே.
மா மகிழ்ச்சி, தேவபிள்ளை
மீட்பரானார், பயமில்லை,
புரிப்பாவோம், அவர்தாமே
கிருபைப் பகலோனாமே.
4. நீர் பிறந்த இனமான
மனிதரின் கேட்டுக்கு
நீர் இரங்கி, உமது
மந்தைக்கு மகிழ்ச்சியான
புது வருடத்தையும்,
ஸ்வாமி, நீர் ஈந்தருளும்,
மா மகிழ்ச்சி, தேவபிள்ளை
மீட்பரானார், பயமில்லை,
புரிப்பாவோம், அவர்தாமே
கிருபைப் பகலோனாமே.
Christ. Keymann, † 1662.