1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்தப்
பணிவோடுண்மையாக
நாம் தோத்திரிப்போமாக
2. நாள் பேச்சைப்போல் கழியும்,
தண்ணீரைப்போல் வடியும்;
இதோ, இந்நாள் வரைக்கும்
இவ்வேழை மண் பிழைக்கும்.
3. அநேக விதமான
இக்கட்டையும் உண்டான
திகிலையுங் கடந்தோம்
கர்த்தாவின் மீட்பைக்கண்டோம்.
4. புயலைவரக் கண்ட
தாயார் தனதுகந்த
குழந்தையை நன்றாகக்
காப்பாற்றும் வண்ணமாக.
5. கர்த்தாவின் கை துன்னாளில்
இரட்சகரின் காலில்
விழுந்தண்ணாந்து பார்க்கும்
சன்மார்க்கரைக் காப்பாற்றும்.
6. அடியார் எச்சரிப்பும்
விசாரிப்பும் விழிப்பும்,
தயாபரா, நீர்தாமே
காக்காவிட்டால் வீணாமே.
7. தினமும் நவமான
அன்பாய் நீர் செய்ததான
அனுக்ரகத்திற்காக,
துதி உண்டாவதாக.
8. இனியும் நீர் சந்தித்து,
அடியாரை ரட்சித்து,
எல்லா இக்கட்டிலேயும்
அன்பாய்ச் சகாயஞ் செய்யும்.
9. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து
நொந்தாலும், உம்மைச் சார்ந்து
நிலைக்கிறதற்காகத்
திடன் அளிப்பீராக.
10. மா ஜன சேதத்துக்கும்
உண்டான போர்களுக்கும்
ஓர் முடிவு வரட்டும்,
நொறுங்கினதைக் கட்டும்.
11. சபையை ஆதரித்து,
அன்பாய் ஆசீர்வதித்து,
எல்லாருக்கும் அன்றன்றும்
அருள் உதிக்கப்பண்ணும்.
12. பொல்லாரத் தயவாகத்
திருப்பிக் கொள்வீராக,
இருளிலே திரியும்
மனிதர்க்கொளியீயும்.
13. திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்,
சாவோரைக் கரையேற்றும்.
14. பரத்துக்கு நேராக
நடக்கிறதற்காக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்.
15. அடியார் அத்தியந்தப்
பணிவாய்க் கேட்டுவந்த
வரங்களை அன்பாகத்
தந்தருளுவீராக.
P. Gerhardt, †1676.