36. வருடப் பிறப்புண்டென்று

1. வருடப் பிறப்புண்டென்று
புதுப் பக்தியுடனே
தேவரீரை நான் பின்சென்று
வர நீர்தாம், இயேசுவே,
எனக்கும் என் வேலைக்கும்
வழிகாட்டியாயிரும்;
எனக்கிப்போதும் இனியும்
ஆசீர்வாதத்தை அளியும்.

2. இது கிருபை பொழியும்
வருடமாகட்டுமேன்;
என்னை நீர் ப்ரகாசிப்பியும்;
என் அழுக்கை அடியேன்
மனஸ்தாபத்துடனே
பார்த்தவருக்கவே,
நற்குணத்தையும் அளியும்
பாவம் யாவையும் மன்னியும்

3. நீர் என் அழுகையைக் கண்டு
துக்கத்தால் கலங்கின
அடியோனைத் தேற்றிவந்து,
நித்தமே உம்முடைய
கையால் என்னைத் தாங்கவும்
பாவத்துக்குங் கேட்டுக்கும்
தப்புவிக்கவும் அன்பாகத்
தயவை அருள்வீராக.

4. மாயமற்ற கிறிஸ்தோனாக
இந்த வருடத்திலே
நான் நடக்கத் தக்கதாக
ஈவளியும், கர்த்தரே,
யாவர்மேலும் பட்சத்தை
வைத்து, தெய்வ பக்தியை
எனக்கு ரட்சப்புண்டாக்க்
காண்பித்தேயிருப்பேனாக.

5. பூரிப்பாய் இவ்வருடத்தை
நான் முடிக்க என்னை நீர்
தாங்கி உமது கரத்தை
என்மேல் வைக்கக்கடவீர்
சகல இக்கட்டிலும்
என்னை ஆதரித்திரும்.
உம்மைப் பற்றிச் சுகமாக
சாவிலுங் கெலிப்பேனாக.

Joh. Rist, † 1667.