1. எல்லாரும் ஏகமாக
இப்புதுவருடப்
பிறப்பில் தாழ்மையாகப்
பணிந்து, உன்னத
கர்த்தாவின் அன்பையே
தியானித்துச் சிந்தித்து
வணங்கித் தோத்திரித்துப்
புகழ ஞாயமே.
2. பிதா இந்நாள் மட்டாக
இரங்கி எங்களை
மா ஆச்சரியமாகக்
காப்பாற்றி வந்ததை
நினைக்கக் கடவோம்.
தயாபரர் கொடுத்த
மெய்ப் போதகத்தின் சுத்த
விளக்கைக் காண்கிறோம்.
3. கர்த்தாவுடைய உண்மை
இரக்கஞ் சாந்தமும்
கேடான பல தின்மை
சேராமல் போகவும்
விலகி நீங்கவும்
செய்து இந்நாள் வரைக்கும்
இவ்வூருக்குஞ்சபைக்கும்
அத்தால் சுகம் வரும்.
4. பிதாவைப்போல் சகித்து
மன்னித்தார், ஏனென்றால்
நியாயத்தைப் பிடித்து
விசாரித்தாரானால்
எல்லாரும் முன்னமே
அவரால் தள்ளப்பட்டு
மடிந்துபோய் வேரற்று
அழிந்திருப்போமே.
5. தயாபரர் இரங்கும்
இரக்கமே துணை,
கிலேசத்தால் கலங்கும்
நெஞ்சாலே இயேசுவை
நாம் பற்றும் போதவர்
அஞ்ஞாயத்தைக் குலைத்து
அடிகளைக் குறைத்து,
இக்கட்டை நீக்குவார்.
6. பிதாவே, எங்களுக்குப்
பிரிய மைந்தனால்
நீர் செய்யுந் தயவுக்கு
எல்லாம் அடியாரால்
துதி உண்டாகவும்;
இனியும் ஆதரித்து,
சீர் தந்தாசீர்வதித்து,
இரக்கமாயிரும்.
Paul Eber, † 1569.