38. ராஜா பிறப்பூர் பெத்லகேம்

1. ராஜா பிறப்பூர் பெத்லகேம், பெத்லகேம்,
மகிழ்ந்து கொய் எருசலேம். அல்லே அல்லேலூயா

2. அவர் படுக்கை முன்னணை, முன்னணை,
செங்கோலோ தெய்வவல்லமை, அல்லே அல்லேலூயா

3. இப்பிறப்பு மா அற்புதம், அற்புதம்,
வானோருக்கும் அதிசயம். அல்லே அல்லேலூயா

4. வணங்க வந்து கண்டோர் யார், கண்டோர் யார்,
ஊர்மேய்ப்பர் தூர சாத்திரிமார், அல்லே அல்லேலூயா

5. பொன் தூபம் போளம் இவர்கள், இவர்கள்,
பணிந்து வைத்த ஈவுகள், அல்லே அல்லேலூயா

6. இப்பிள்ளை கன்னி புத்திரர், புத்திரர்,
மகா கர்த்தாவுமானவர், அல்லே அல்லேலூயா

7. புவியில் இவர் ஒருவர், ஒருவர்,
விடந் தீண்டாத மனிதர், அல்லே அல்லேலூயா

8. நாம் அவர் ஏக மாமிசம், மாமிசம்,
ஆனாலும் அவர் நற்குணம், அல்லே அல்லேலூயா

9. தாம் கேட்டை நீக்கி, நமக்கு, நமக்குக்
குணந்தர இதாயிற்று, அல்லே அல்லேலூயா

10. யார் இதை நன்றாய்ப் பாடுவர், பாடுவர்,
த்ரியேக ஸ்வாமிக்குப் புகழ், அல்லே அல்லேலூயா

Petrus Dresdenis, † 1440.