1. நேசமுள்ள இயேசுவே,
யாக்கோபில் உதயமான
அற்புத நட்சத்ரமே,
காணிக்கையை ஏழையான
நான் செலுத்த அண்டினேன்.
அதை ஏற்றுக்கொள்ளுமேன்.
2. நீர்தாமே உண்டாக்கின
விசுவாசம் நான் கொடுக்கும்
பொன்; இதே உம்முடைய
இதயத்துக் கேற்றிருக்கும்;
அது தீக்குகையிலே
புடமிட்டிருக்கவே.
3. ஜெபம் என்ற தூபத்தை
ஏற்றுக் கொண்டருள்வீராக
நெஞ்சும் உதடும் அதை
நித்தம் உமக்கீவதாக.
நீர் என் ஜெபம் துதிக்கும்
ஆமேன் என்று சொல்லவும்.
4. நீர் மெய மனத்தாபமாம்
வெள்ளைப்போளந் தள்ளீராக,
அழும் பாவியை நீர்தாம்
சேர்ப்பீர், நான் மகிழ்ச்சியாக,
இயேசு ஸ்வாமி அடியேன்
காணிக்கை தள்ளார் என்பேன்.
Erdm. Neumeister, † 1756.