1. என் இதயமே, விழி,
இயேசு தம்மை உனக்காக
ஈயும் அன்பைக் கவனி,
அதையே தியானமாகப்
பார்; இதோ, எக்கேடுந்தீங்கும்
அவர் மீட்பினாலே நீங்கும்.
2. முள்முடி சூடுண்டிதோ,
மரத்தில் அறையப்பட்டார்;
தேவ மைந்தன் தான் அல்லோ
காயப்பட்டு, எண்ணமற்றார்.
அவர் உன்ளை மீட்கச் சாகும்
3. கெட்ட பாவியாகிய
நீதான் குற்றவாளியாமே,
என்றும் வாதிக்கப்பட
நீ அல்லோ பாத்திரனாமே.
ஆனால் இயேசு உன்னை மீட்டார்,
உன் கடனை அவர் தீர்த்தார்.
4. அவர் பாடுபட்டதால்
தெய்வ கோபம் ஆற்றப்பட்டு,
நீதி தீர்ந்த்தாகையால்
பேயின் அடிமைத்தனத்து
லச்சையை அவர் முறித்தார்,
உயிரை உன்க்களித்தார்.
5. மனமே, இப்போதும் நீ
என்ன செய்வ தேற்றிருக்கும்,
பாடுபட்டோருக்கு நீ
அந்ந எல்லா நேசத்துக்கும்
என்னத்தைச் செலுத்தப்போவாய்
நீ அவருக்கென்னஈவாய்
6. அடியேன் ஓர்க் காலமும்
அவர் என் ரட்சிப்புக்காகப்
பட்ட நோவனைத்துக்கும்
எதையாகிலும் ஈடாகச்
செய்ய என்னாலாவதில்லை;
நான் ஆதாமின் கெட்டபிள்ளை.
7. இனி பாவத்தை எல்லாம்
அடியேன் அருவருப்பேன்;
இயேசுவுக்குத் துக்கமாம்
சகலத்தையும் வெறுப்பேன்
அவர் பேரில் பக்தியாக
நல்வழியில் போவேனாக.
8. பாவமே, துன்மார்க்கமே
என்னை விட்டுப்போ, உன்னாலே
யாவுங் கெட்டுப்போயிற்றே
உனது மயக்கத்தாலே
எந்தத் தீமையும் உண்டாகும்.
9. இயேசுவே, நான் உமக்கே
முழுதும் ஆதீனமாவேன்;
உம்மைப்பற்றி, உம்மையே
நான் பின் செல்லுஞ் சீமனாவேன்,
உம்மில் என்றும் நிலைநிற்பேன்,
உம்மில் சாவிலுந் தரிப்பேன்.
10. எனக்கும்மைத் தந்தீரே,
உமக்கென்னை ஒப்புவிப்பேன்.
உம்மைப் பற்றி உமக்கே
ஏற்றதை நான் இனிச்செய்வேன்;
ஏற்றிராததைப் பகைப்பேன்,
இயேசுவே, உம்மில் நிலைப்பேன்.
11. உம் நடத்துதலுக்கும்
சொல்லுக்குங் கீழ்ப்பட்டிருப்பேன்.
நான் மனமாய் சிலுவையையும்
நல்ல மனமாய் எடுப்பேன்
எனக்குமதாவிதாமே
மோட்சத்தின் அச்சாரமாமே.
12. நீர், நீரே எந்தன் செல்வம்,
உம்மை என்றும் விட்மாட்டேன்
உமதைக்யமே நலம்,
வேறொன்றாலும் என்னை ஆற்றேன்
நான் நீர் மீட்ட ஏழைப்பிள்ளை;
நீர் என்னைத் தள்ளுவதில்லை.
13. உம்மை விசுவாசித்துப்
பற்றிக்கொண்டிருப்பதாலே
இம்மையிலே எனக்குப்
பூரிப்புண்டு ஆகையாலே,
மறுமையில் என்றென்றைக்கும்
வெகுவத்தனை கிடைக்கும்.
14. போரின் பிறகெத்தனை
பாக்கியங்கள் என்றென்றைக்கும்
அங்குண்டாகும்! எத்தனை
செல்வங்கள் அப்போ கிடைக்கும்
என்றும் அங்கே நான் களிப்பேன்
என்றும் கர்த்தரைத் துதிப்பேன்.
15. இயேசுவே, நீர் எனக்குத்
தேடின அவ்வாழ்வின் மேலே
மிகவும் என் மனது
வாஞ்சையாக, இம்மானுவேலே
அதில் நான் பங்காளனாக
நீர் சகாயஞ் செய்வீராக.
Joh. Casp. Schade, †1698.