1. என்னுடைய சாவின் சாவே,
என் உயிரின் உயிரே,
என்னை மீட்க நீர், கர்த்தாவே,
தேவ கோபத் தீயிலே
பாய்ந்து, மா அவதியாகப்
பட்ட கன வாதைக்காக
உமக்காயிரத் தரம்
இயேசுவே, சங்கீர்த்தனம்.
2. கேட்டின் சங்கிலிகளுக்கு
என்னை நீங்கலாக்கவே,
உம்மைத்தீயோர்துஷ்டத்துக்கு
நீரே, தேவமைந்தனே,
சூறையிட்ட கள்ளனாக்க்
கட்டப்பட்ட நிந்தைக்காக
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
3. நான் சுகிக்க நீர் இக்கட்டு,
துன்பம், வாதை நோவிடர்,
குட்டறை பொல்லாப்பும்பட்டு,
வாரடியும் பட்டவர்.
ஆசீர்வாதமே உண்டாக
சாபமானீர் எனக்காக;
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
4. ஜீவக்ரீடம் நான் தரித்து,
வாழவும் உயரவும்
தூஷணமெல்லாஞ் சகித்து
நிந்தை துப்புதலையும்
ஏற்றக்கொண்டு எண்ணமற்ற
முள்முடியால் சூட்டப்பட்ட
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
5. நான், நான் ஆக்கினைப்படாமல்
பூரிப்பாய் மகிழவே
சுயஉடலைப் பாராமல்
வாதிப்பாரின் இச்சைக்கே
அதைவிட்டு, கள்ளர்கிட்ட
தூக்கப்பட்டோராய்த் தவித்த
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
6. என் அஞ்ஞாயத்தைக் கழித்து
என்னை மீட்டு விடவே
நோவு யாவையும் சகித்து,
நல்ல மனதுடனே
ரத்தஞ்சிந்தி மா நிர்ப்பந்த
சிலுவையிலே இறந்த
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
7. உம்முடைய பணிவாலே
என் இடுப்பின் ஆக்கினை
உம்முடைய நிந்தையாலே
என்னுடைய சிறுமை
தீரும்; உம்முடைய சாவு
சாவில் எனக்கான தாவு
உமக்காயிரந் தரம்,
இயேசுவே, சங்கீர்த்தனம்.
8. இயேசுவே நிர் சாந்தமாக
உள்ளேயும் புறம்பேயும்
உயிர் போகுமளவாகப்
பட்ட பாடனைத்துக்கும்
என்ன சொல்வேன் எனக்காகப்
பட்டீரென்று தாழ்மையாக
உம்மை நான் வணங்குவேன்,
என்றென்றைக்கும் போற்றுவேன்.
E.Ch. Homburg, † 1681.