51. இதோ, மரத்தில் சாகும்

1. இதோ, மரத்தில் சாகும்
உன் ஜீவன் உனக்காகும்
பலியாம், லோகமே
பொல்லாப்படி வாதையைச்
சகிக்கும் மா துரையைக்
கண்ணோக்குங்கள், மனிதரே.

2. இதோ, மா வேர்வையோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்,
நல்நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்.

3. யார் உம்மைப் பட்சமான
கர்த்தா இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்.
நீர் பாவியாய் இரீரே,
பொல்லாப்பை அறியீரே;
யார் இந்தக் கேடுண்டாக்கினான்.

4. ஆ! இதைச்சேய்தேன் நானும்
என் அக்ரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதங்கள் இந்த
வதைப்புக் காதிமூலங்கள்.

5. நானே கைகால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் ஞாயமே;
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.

6. நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கின்றீர்.
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகின்றீரே;
நான் தப்ப நீர் படுகின்றீர்.

7. நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்;
ஆ, சாந்தமான சிந்தை,
நீர் முள் முடியின் நிந்தை
எத்தீங்கையும் பொறுக்கின்றீர்.

8. நான் சாவின் வாய்க்குத் தப்ப,
நீரே அதை நிரப்ப
அதில் விழுகின்றீர்;
நான் நீங்க நீர் முன் நிற்பீர்,
நான் வாழ நீர் மரிப்பீர்,
அத்தன்மை என்னை நேசித்தீர்.

9. நீர் என்னை முட்டதாலே
நான், ஸ்வாமி, உமதாளே;
என் ஆவி தேகமும்
என் நாழியும் இமையும்
நான் மரணம் அடையும்
நாள் மட்டும் உம்மைப்போற்றவும்.

10. நான் ஏழையாயிருக்க
பதிலுக்குக் கொடுக்கக்
கூடாதே போனாலும்,
என் நெஞ்செப் போதுமாக
நீர், ஸ்வாமி எனக்காகச்
சகித்த்தை நினைக்கவும்.

11. அதே நான் என்றென்றைக்கும்
என் கண்முன்பாக வைக்கும்
கண்ணாடியாவது;
அத்தால் விளக்கப்பட்ட
மெய் நேசமும் மாசற்ற
சன்மார்க்கமும் என் யோசிப்பு.

12. என் பாவத்தால் எரியும்
கர்த்தாவின் கோபத்தியும்
தாம் செய்யும் நீதியும்
தாம் கண்டிக்கும் கண்டிப்பும்
அழிக்கிற அழிப்பும்
ஏதென்றிப்பாடும் காண்பிக்கும்.

13. நீர் சாந்தத்தோடும் பட்டு,
பொல்லார்மேல் கோபமற்று,
எல்லா அஞ்ஞாயமும்
சகித்த்தை நான் நோக்கி
என் பேய்க்குணத்தைப் போக்கி
தெய்வீக சாந்தமாகவும்.

14. துன் நாக்குகள் வைதாலும்,
என்மேல் குறை சொன்னாலும்,
நான் சாந்தம் பூணுவேன்.
அஞ்ஞாயத்தைச் சகித்து,
நல்மனதாய் மன்னித்து,
பகைஞர்மேல் இரங்குவேன்.

15. கர்த்தாவே நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத் தரோசிப்பேன்.
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்.
நான் சிலுவையில் அறைவேன்.

16. ஆ, உமது ஜெபமும்
அவஸ்தையுந் தவமும்
கண்ணீருந் துக்கமும்
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப்போக
பழித் துணைக்குதவவும்.

P. Gerhardt, †1676