52. இரத்தங் காயங் குத்தும்

1. இரத்தங் காயங் குத்தும்
நிறைந்து நிந்தைக்கே
முள் க்ரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட
நீலச்சை காண்பானேன்,
ஐயோ, வதைந்து நொந்த
உன் முன் பணிகின்றேன்.

2. பூலோகமுன் பணியும்
முகத்தின் மேனியே,
ஏன் உன்னைத்தான் உமியும்
தீட்பாயிற்றந்தமே
ஐயோ, நீ வேறுபட்டாய்
பர வெளிச்சமாம்
கண் ஜோதி மா இக்கட்டாய்
இருண்டு மங்கலாம்.

3. அன்புள்ள கன்ன ரூபும்
உதட்டு வர்ணமும்
வெட்டுண்ட புல்லும் பூவும்
படும்போல் உலரும்,
மடிய வேண்டுமோ,
தகுந்தவன் அன்றோ.

4. நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே.
இத்தீங்கம் நோவுஞ் சாவும்
என் குற்றம் கர்த்தரே.
இதோ, நான் என்றுஞ் சாக
தக்கவன் என்கிறேன்.
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்.

5. நீர் என்னை உமதாடாய்
அறியும்,மேய்ப்பரே.
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகந்தீர்த்தீரே,
நீர் என்னைப் போதிவிக்க
அமிர்தம் உண்டேனே,
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே.

6. உம்மண்டை இங்கே நிற்பேன்,
என்மேல் இரங்குமேன்.
விண்ணப்பத்தில் தரிப்பேன்,
என் கர்த்தரை விடேன்.
இதோ, நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்,
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்.

7. என் ஏழை மனத்திற்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்திற்குப்
பலிக்கும், மீட்பரே,
என் ஜீவனே, நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணைமூடி
மரித்தால் நன்மையே.

8. நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர்பட்ட கஸ்திக்காகத்
துதிப்பேன், இயேசுவே.
நான் உம்மில் ஊன்றி நிற்கச்
சகாயமாயிரும்;
நான் உம்மிலே மரிக்க
நீர் க்ருபையருளும்.

9. நான் மாளுங்காலம் வந்தால்
பிரிந்திராதேயும்;
நான் தொய்ந்துபோய்க் கிடந்தால்
தரிசனை கொடும்.
என் மனக்லேசம் மெத்தப்
பாடாம் எந்நேரமும்
நீர் சிந்தின இரத்த
பலத்தால் ரட்சியும்.

10. என் மூச்சொடுங்கும் அந்தக்
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாக்க் காண்பியும்
அப்போ நான் உம்மைப்ப் பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு காத்துக்
தூங்குவேன் இயேசுவே.

P. Gerhardt, †1676