1. எத்துணை நிர்ப்பந்த பாவ ஜாதி நாம்
பாவத்தாலே வந்தகேடு மிகவாம்.
நம்மை என்றும் கொல்லும் மரணம் அல்லோ
தெய்வ வாக்கு சொல்லும் ஆக்கினை, ஐயோ.
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
2. பாவத்தால் பலத்த சாவை நீக்க நாம்
என்றுஞ் சக்தியற்ற ஏழைக் கூட்டமாம்.
தப்பி நீங்கலாகத் தெய்வ மைந்தன் தாம்
தாழ்ந்து நமக்காகச் சாகத் தேவையாம்.
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
3. கிறிஸ்து இங்கே வந்து நல்ல மனத்தால்
ஏழையாய்ப் பிறந்து மாண்ராவிட்டால்,
நாம் எல்லாருமாக முடிவின்றியே
சாபத்துக்குள்ளாகப் போய்க் கிடப்போமே,
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
4. மோட்ச வாழ்வைத் தேடித்தர, வாஞ்சையால்
சிலுவையில் ஏறி மாண்ட மைந்தனால்
சுத்த தயவான அன்பாய் ஸ்வாமியார்
இந்த மேன்மையான மீட்புண்டாக்கினார்.
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
5. பாவம் சாவு சாபம் என்றாவைகளால்
தோன்றும் மனத்தாபம் போயிற்றேனென்றால்
இயேசுநாதராலே கேடுகளெல்லாம்
தீர்ந்த படியாலே ஆறுதலுண்டாம்.
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
6. இந்த அன்புக்காக நம்மால் ஸ்வாமிக்கு
மகிமையுண்டாகத் தாமே தயவு
செய்து நல்ல மார்க்கச் சீரை நமக்கு
உண்டு பண்ணிக்காக்க, பண்ணுவோம் மனு.
ஸ்வாமி, இரங்கும்,
கிறிஸ்தே, இரங்கும்,
ஸ்வாமி, இரங்கும்,
H. Bennus, † 1548.