54. என் பாவங்களினாலே

1. என் பாவங்களினாலே
உண்டாந் திகிலிலே
நீரே இரக்கத்தாலே
என் ஸ்வாமி இயேசுவே,
என் பாவப் பாரம்யாவையும்
சுமந்து மாண்ட அன்பு
என் நெஞ்சைத் தேற்றவும்.

2. இத்தயவை நன்றாக
ஆராய்பவர்கள் யார்;
கர்த்தர் அடியார்க்காகப்
பாடு சகிக்கின்றார்
மா அற்புதம், தயாபார்
சீர் கெட்ட பாவிக்காக
உயிரைத் தந்தவர்.

3. என் பாவத் திரளாலே
இனிப் பயம் உண்டோ,
கர்த்தாவின் ரத்தத்தாலே
நான் நீதிமான் அல்லோ,
நான் கிறிஸ்துக்குள் ஒதுங்கினேன்.
நான் நரகாக்கினைக்கு
இனிப்பயப்படேன்.

4. ஆ உமது மிகுந்த
உபாதி சஞ்வலம்
கண்ணீர் ஜெபம் சிந்துண்டு
இரத்தம் துயரம்
அவஸ்தை சாவுக்காகவும்
கர்த்தாவே, உமக்கென்றும்
துதி புகழ்ச்சியும்.

5. நீர்பட்ட மா அகோரப்
பாடென்னை நித்தமே
துரிச்சையை விட்டோட
ஏவட்டும், இயேசுவே.
மகா உயர் விலையாய் நான்
ரட்சிக்கப்பட்டேனென்று
நன்றாய் நினைக்கத்தான்.

6. என் சிலுவையை நித்தம்
இகழ்ச்சி யாவையும்
நான் தாங்கி தெய்வ சித்தம்,
ஆகட்டும் என்கவும்,
எல்லாம் வெறுத்து உம்மையே
பின் பற்றவும் பலத்தை
அளியும் கர்த்தரே.

7. என்மேல் நீர் வைத்திருக்கும்
அன்பாய் அடுத்தோனை
நான் நேசித் தெவனுக்கும்
தகுஞ் சகாயத்தை
ஆகாத நாட்டம் மாயமும்
இல்லாமல் மனமார
இரங்கிச் செய்யவும்.

8. மாண்டால் உம்மண்டை சென்று
அனந்த ஆறுதல்
உம்மால் அடைவேனென்று
நீர் பட்ட காயங்கள்
பலமாய் என்னைத் தேற்றவும்.
நான் உம்மையே கொம்பாகப்
பிடித்தேன், ரட்சியும்.

J. Gesenius, † 1671.