1. இயேசுவே, என் ஜீவனே,
என் கதியுமான
நிந்திய வெளிச்சமே,
நீசப் பாவியான
நான் நீர் பட்ட வாதையை
நோக்கிக்கொண்டு சொல்லும்
ஏழைத் தோத்திரங்களை
அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.
2. கர்த்தரே நீர் மெத்தவும்
பாடும் நோவுமான
வேதனை அனைத்தையும்
வேகு நிந்தையான
சாவையும் அடைந்தது
என்ன, எதுதானே
அதற்கும்மை ஏவிற்று
பரிசுத்தவானே.
3. சுய மனச்சாட்சியில்
குற்றவாளியாகத்
தீர்க்கப்பட்டோன் உள்ளத்தில்
ஆறுதலுண்டாக,
நீரே தெய்வ அன்பினால்
மீட்பராக வந்தீர்
எனக்காய் இரக்கத்தால்
ஜீவனையுந் தந்தீர்.
4. இது யாவர் புத்திக்கும்
ஆச்சரியமான
தயவும் இரக்கமும்,
நாங்கள் செய்ததான
பாவங்கள் கணக்குக்கு
மிகவும் விஸ்தாரம்;
அதுதானே உமது
மேல் சுமந்த பாரம்.
5. என் பொல்லாத இச்சையால்
உமது மேல் தீது
வந்த்து, என் பாவத்தால்
தேவரீரின் மீது
கன வாதைகளையே
உண்டு பண்ணுவித்தேன்;
உம்மைச் சிலுவையிலே
அதனால் அடித்தேன்.
6. எங்கள் ஆக்கினைகளை
நீர் சுமந்ததாலே
ஆண்டவரின் கிருபை
எங்களுக்கும்மாலே
தேடி வைக்கப்பட்டது.
நித்த நித்தமாக
இதற்காக உமக்குத்
தோத்திரம் உண்டாக.
7. இப்போதும் என் மனத்தின்
பயத்தை அனற்றும்,
தத்தளிக்கும் ஆவியின்
ஆகுலம் நீங்கட்டும்
நோவைப்பட்ட இயேசுவே
திகிலால் கலங்கும்
ஆத்துமத்தின் பேரில்
தேவரீர் இரங்கும்.
8. தெய்வ அன்பின் ஆறுதல்
எனக்கு நேராக
வந்ததால் என் துக்கங்கள்
மாறும்படியாக
நீர் இரங்கி, யாவையும்
எனக்கு மன்னியும்;
தேற்றரவும் பூரிப்பும்
அதனால் அளியும்.
9. என் ஒன்றான நம்பிக்கை,
இயேசுவே, நீர் தாமே,
நீர் துக்கித்த பாவியைத்
தேற்றுபவராமே
ஆகையால் என்னில் பயம்
பேயினால் வந்தும்,
எனதாவி உம்மிடம்
கிட்டி உம்மை அண்டும்.
10. நீர், அன்புள்ள இயேசுவே
ஏறு கடைசியில்
என்னை உம்மிடத்திலே
பரம கதியில்
சேர்த்துக்கொள்ளும் மட்டுக்கும்
உம்மை நான் நன்றாகப்
பற்றவும் பின் செல்லவும்
ஈவளிப்பீராக.
H. Held, about †1643.