56. இயேசு, உட்தைந்து காயம்

1. இயேசு, உட்தைந்து காயம்
நோவுஞ் சாவும் எனக்கு
எந்தப் போரிலுஞ் சகாயம்
ஆறுதலுமாவது.
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக.

2. எனக்கின்பமான வாழ்வை
நான் இச்சிக்கும் பொழுதே,
எனக்கும்முடைய தாழ்வை
நினைப்பூட்டும், இயேசுவே.
சாத்தான் என்னைச் சுற்றுகில்
உம்முடைய கைகளில்
உள்ள அச்சை நான் நம்பட்டும்
இயேசுவே, அதைத் துரத்தும்.

3. லோகம் தன் சந்தோஷமான
நரக வழியிலே
என்னைக் கூட்டிக் கொள்வதான
மோசத்தில் நான், இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்,
அப்போ மோசங்கள் கலையும்.

4. எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்கனுகூலஞ் செய்யும்
என்பதே என் ஆறுதல்;
ஏனேனில் நீர் எனக்குப்
பதிலாய் எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்.

5. நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே
இதை முழுமனதாலும்
நான் நம்பட்டும், இயேசுவே
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக.

6. இயேசு, உமதைந்துகாயம்
நோவுஞ் சாவும் எனக்கு
எந்தப் போரிலுஞ் சகாயம்
ஆறுதலுமாவது
முடிவில் விசேஷமாய்,
என்னை மீட்ட மீட்பராய்,
என்னை ஆத்ரித்தன்பாக
அங்கே சேர்த்துக்கொள்வீராக.


Joh. Heermann, †1647.