57. ராத்திரியில் கிறிஸ்துவின்

1. ராத்திரியில் கிறிஸ்துவின்
ஆத்தும இக்கட்டு
தோட்டத்தில் முடிந்தபின்
அவர் கட்டப்பட்டு,
வேதம் கூறும்படியே
வெகு நிந்தை பெற்றார்
குற்றம் ஒன்றில்லாமலே
சாகத் தீர்க்கப்பட்டார்.

2. அதிகாலை அவரைக்
குற்றவாளியாக்க்
கொண்டுபோய்ப் பிலாத்தண்டை
மிகுதியுமாகக்
கூப்பிட்டும் புளுகியும்
மூர்க்கங் காண்பித்தார்கள்;
போய் ஏரோதேயிடமும்
குற்றம் சாட்டினார்கள்.

3. ஒரு சாமஞ் சென்ற பின்
வாரடிகளாலும்
முள் முடியால் சேனையின்
பரியாசத்தாலும்
துன்பப்பட்டார்; மெத்தவும்
உத்தரித்து வந்தார்;
பாரச் சிலுவையையும்
அவர்தான் சுமந்தார்.

4. அதில் கள்ளர் நடுவில்
அவர் அறையுண்டு
தூஷிக்கப்படுகையில்
அன்பாய்க் கோபமுற்று
ரத்தஞ் சிந்தி, நல்மனு
பாவிகளுக்காக்க்
கேட்டார், பகல் மாறிற்று
அந்தகாரமாக.

5. மூன்றாம் மணியில் மகா
துக்கச் சத்தமிட்டார்;
யாவும் நிறைவேறின
போதுயிரை விட்டார்.
கோவில் திரை போனது
இரண்டு துண்டாக
பூமியும் அசைந்தது
மா திகைப்புண்டாக.

6. அந்தி நேரமாகிய
பொழுதீட்டியாலே
இயேசுவினது விலா
குத்தப் பட்டதாலே
நம்முடைய நன்மைக்கு
ரத்தமுந் தண்ணீரும்
பாய்ந்த தத்தால் நமது
பாவக் குஷ்டந் தீரும்.

7. யோசேப் சாயங்காலத்தில்
கூச்சத்தை விலக்கி,
போய் எல்லாரும்  பார்க்கையில்
இயேசுவை இறக்கி,
வெகு பக்தியுடனே
கல்லறையில் வைத்தான்;
கல்லை வாசல் பேரிலேங
போட்டதை அடைத்தான்.

8. ஏன் மரித்தீர் என்பதை
யோசிப்பாய் நினைத்து
பாவத் துர்க்குணங்களை
யாவையும் பகைத்து,
உம்மைத் தேவ மைந்தனே,
நித்த நித்தமாப்
போற்றிப் பற்றிக்கொள்ளவே,
ஈவளிப்பீராக.

Moravian Brethren