58. நீர் அநாதி நேசத்தாலே

1. நீர் அநாதி நேசத்தாலே
இயேசுவே என் அக்ரமம்
யாவையும் சுமந்ததாலே
உமக்கென்றும் தோத்திரம்.
தேவரீர் அடியேனை
மீட்கும் சிலுவையண்டை
முழங்காலில் நான் தரிக்கும்
போதென் இதயம் களிக்கும்.

2. காயத்தால் ப்ரவாகமாக
ரத்தம் ஓடும் பாதத்தை
முத்தமிட்டுக் கெட்டியாகத்
தழுவுதல் என் வாஞ்சை
தேவரீர் என் பேரிலும்
கொண்ட வேட்பும் தாகமும்
நரரின் புத்திக்கெட்டாது,
அதற்கெங்கும் ஒப்பிராது.

3. ஆதாம் ஏவாளால் பலித்த
கேட்டையும், நான் தினமும்
திரளாக நடப்பித்த
எல்லா அக்ரமத்தையும்
நீக்கும், பரிகாரியே,
தேவரீர் ரத்தமே
நோவு யாவிலுமிருந்து
மீடக்ம் உத்தம மருந்து.

4. இயேசுவே, நீர் எனக்காகப்
பட்ட வெகு காயத்தை
எக்கணமும் பக்தியாக
நான் நினைக்க நீர் அதை
எனக்குள் வரையவும்.
நீர் என் பங்கும் நன்மையும்
என்றும்மண்டையில் தரிப்பேன்.
தெய்வ நேசத்தை ருசிப்பேன்.

5. நான் இப்பாதத்தில் விழுந்து
அதைக் கட்டிக்கொள்ளுவேன்,
சிலுவையிலேயிருந்து
என்னை அன்பாய்ப் பாருமேன்,
கேளும் என் விண்ணப்பத்தை;
உன் ஏராள பாவத்தை
நான் மன்னித்தேன் என்றுரையும்;
என் சலிப்பப்போ கலையும்.

P. Gerhardt, †1676.