1. வாதையுற்ற மீட்பரே
என் அடைக்கலம் நீரே
நான் என் பாவ பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.
2. ஞாயத் தீர்ப்பில் என் எல்லாப்
புண்ணியமும் விருதா.
தளரா முயற்சியால்,
மனத்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்கா தென்றைக்கும்,
கிருபைதான் ரட்சிக்கும்.
3. உள்ளவண்ணம் அண்டினேன்
அன்பாய் என்னை நோக்குமேன்
திக்கற்றேன் நான் ரட்சியும்.
நான் அசுத்தன், கழுவும்;
மூடும் என் நிர்வாணத்தை;
ஏழைக்கீயும் செல்வத்தை.
4. வாதையுற்ற மீட்பரே,
என் அடக்கலம் நீரே.
என் இக்கட்டனைத்திலும்,
சாகுந் தருணத்திலும்,
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.