60. யாரை நான் புகழுவேன்?

1. யாரை நான் புகழுவேன்?
யாரை நான் அறிகிறேன்?
என் கதியும் பங்கும் யார்?
நான் பாராட்டும் மேன்மையார்?
தேவ ஆட்டுக் குட்டிதான்.

2. யார் நான் நிற்கும் கன்மலை?
யார் என் திட நம்பிக்கை?
குற்றத்தைச் சுமந்தோர் யார்?
தேவநேசம் தந்ததார்?
தேச ஆட்டுக் குட்டிதான்.

3. என் பிரான பலம் யார்?
ஆத்துமத்தின் சாரம் யார்?
யாரால் பாவி நீதிமான்?
யாரால் தேவ பிள்ளை நான்?
தேவ ஆட்டுக் குட்டியால்.

4. கஸ்தியில் சகாயர் யார்?
சாவின் சாவு எனக்கார்?
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்பதார் நான் சாகையில்?
தேவ ஆட்டுக் குட்டிதான்.

J.C. Schwedler, † 1730.