61. ஆ, இயேசுவே, நீர்பாடுபட்ட

1. ஆ, இயேசுவே, நீர்பாடுபட்ட
சரித்திரத்தைக் கேட்கிறோர்
அநேகர் தங்கஙள மா பலத்த
மாயத்திலே அசைவற்றோர்.
சிலத் யூதாவையும் சிலர்
காய்பாவையும் பழிப்பவர்.

2. சீமோன் நிலைவரமில்லாதோன்,
முள்பின்னினோர் அன்பற்றவர்.
பிலாத்துநீதியைச் செய்யாதோன்
மனிதர் மா பொல்லாதவர்
என்றெவரும் அம்மனிதர்
கொடுஞ்செயலைக் கோபிப்பர்.

3. நீர்பட்டதை நன்றாய்சிந்திந்து
சபிக்கப்பட்ட பாவங்கள்
அனைத்தையும் பகைத்துவிட்டு
அவ்வேதனைகளின் திரள்
தங்களினால் உண்டானதே
என்றழும் பேர்கள் கொஞ்சமே

4. நீர் எங்கள் பாவத்தாலுண்டான
நிர்ப்பந்த்த்தைச் சுமந்தீரே,
அநேகரோ தினம் தீங்கான
படி நடக்கிறார்களே
அதும்மைத் தான் அடிக்கடி
வதைக்கிறதற்கே சரி.

5. நீர் பட்ட கன வாதையாலே,
அடியேன் நெஞ்கம் என்னிலே
நொறுங்கி பண்ணும், இயேசுவே
நரரை மோசம் செய்கிற
பிசாசும் என்னை விலக.

6. நான் ஒன்றின்பிறகால் ஒன்றாக
நீர் பட்ட தீங்கைப் பாடியும்,
நெஞ்சிளகாது கெட்டியாக
இருந்தால், என்ன சீர்வரும்
மனந்திரும்ப வேண்டுமே,
இதற்குதவும் இயேசுவே.

7. நான் மெத்த மனத்தாபமாக
என் பாவங்களின் நிமித்தம்
புலம்பி அழத்தக்கதாக
தெய்வீகமான துயரம்
என் உள்ளம் முழுவதையும்
நிரப்பக் கட்டளையிடும்.

8. இனி நான் உமக்கேற்றிராத
அனைத்தையும் விட்டோடவும்
உம்மோடே ஐக்யமாய்ப் பொல்லாத
லௌகீக இச்சை யாவுக்கும்
மாண்டும்மிலே நிலைக்கவும்
சகாயஞ் செய்துகொண்டிரும்.

9. என் விசுவாசத்தைத் தடுக்க
போர் செய்யும் சத்துருக்களை
நான் வெல்ல பலமாயிருக்க,
என் மீட்பரே, நீர்தான் துணை;
உம்மால் என் பக்தி நித்தமும்
அதிகமாய் வளரவும்.

10. நீர் உத்தரித்ததை நன்றாகச்
சிந்தித்துக்கொண்ட மனிதன்
பேய்க் கூட்டந் தனக்கெதிராக
வந்தாலும், இடறாதவன்;
அதேனெனில் உலகத்தான்
இச்சிப்பதை அரோசிப்பான்.

11. யார் உம்முடைய ஐக்யத்துக்கு,
யார் சிலுவையின் தாழ்மைக்குப்
பகைஞரோ, அவர்களுக்குப்
பூலோகத்தின் சிங்காரிப்பு
புகழ்ச்சி செல்வமும் எல்லாம்
எல்லாத்திலும் பிரியமாம்.

12. ஆ, தேவரீரது தவிப்பும்
இரத்த வேர்வை வாதையும்
உம் மரண அனுபவிப்பும்
என் நெஞ்சில் தங்கி, நித்தமும்
என் கெட்ட இச்சைகளையே
முறிக்கப்பண்ணும், இயேசுவே.