1. என் மனமே
துடிக்குமே
குலைபதைத்து நோகும்
தேவமைந்தனின் உடல்
கல்லறைக்குப் போகும்.
2. ஆ, அவரே,
மரத்திலே
அறையப் பட்டிறந்தார்
கர்த்தர் தாமே பாவியின்,
சாவத்தைச் சுமந்தார்.
3. என் பாவத்தால்,
என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்;
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்.
4. என் ஆண்டவர்,
என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கின்நார்
என் ரட்சிப்புக்காக.
5. வெட்டுண்டோரே,
ஆ, உம்மையே
பணிந்தேன் ஆவிபேணும்,
ஆகிலும் என் நிமித்தம்,
நான் புலம்பவேண்டும்.
6. குற்றமில்லா
மகா கர்த்தா
உமது ரத்தம் ஊறும்;
மனந்தாபமின்றி யார்
அதைப் பார்க்கக் கூடும்.
7. ஆ, இயேசுவே,
என் ஜீவனே,
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக.
8. நான் மிகவும்
எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்,
என் கதியாம் இயேசுவே,
உம்மை வாஞ்சிக்கட்டும்.
Jon. Rist, † 1667.