64. இந்நாளில் தேவமைந்தனார்

1. இந்நாளில் தேவமைந்தனார்
மகிமையாய் ஜெயிக்கிறார்.
அல்லேலூயா, அல்லேலூயா,
எழுந்த அவர் என்றைக்கும்
தோத்திரிக்கப்படவுமே.
அல்லேலூயா, அல்லேலூயா,

2. பிசாசின் சக்தியை அவர்
முறித்துப்போட்ட ப்ராக்ரமர்.
அல்லேலூயா, அல்லேலூயா,
அனைவரும் அதற்குண்டாம்
கொடூரக் கைக்கு நீங்கலாம்
அல்லேலூயா, அல்லேலூயா,

3. ஆ பாவிகளின் மீட்பரே,
ஜெயித்த இயேசு கிறிஸ்துவே,
அல்லேலூயா, அல்லேலூயா,
பிசாசின் கீழே நாங்களும்
இராப்படிக் கிரட்சியும்.
அல்லேலூயா, அல்லேலூயா,

4. புவி தீமை நிறைந்த்து,
நீரோ அடியார் பூரிப்பு
அல்லேலூயா, அல்லேலூயா,
நீர் மோட்சத்துக்கு வாசலே,
அங்கே அழையும் இயேசுவே,
அல்லேலூயா, அல்லேலூயா,

5. பகைஞர் யாவரும் இப்போ
முறுமுறுத்தும் அச்சமோ
அல்லேலூயா, அல்லேலூயா,
பொல்லாத சத்துராதிக்குக்
கேடான தோல்வி வந்தது.
அல்லேலூயா, அல்லேலூயா,

6. அதன் ஆங்காரத்துக்கொல்லாம்
அனந்த வெட்கமே உண்டாம்.
அல்லேலூயா, அல்லேலூயா,
ரட்சிக்கப்பட்ட மனிதர்
கர்த்தாவுடைய புத்திரர்
அல்லேலூயா, அல்லேலூயா,

7. இத்தால் சந்தோஷமாகிறோம்.
இத்தயவைப் புகழுவோம்,
அல்லேலூயா, அல்லேலூயா,
த்ரியேகசரே, எப்போதும் நீர்
துகிக்கப்படக்கடவீர்.
அல்லேலூயா, அல்லேலூயா,

Barthol. Gesius, †1601.