1. இந்நாளே கிறிஸ்துவெற்றியை
அடைந்து தம் பகைஞரைச்
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
ஜெய நாளேன்று பாடுவோம்.
அல்லேலூயா.
2. பேய் பாவம் சாவு நரகம்
என்கேடும் இன்றையத்தினம்
எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்
கீழாய் விழுந்து கெட்டது.
அல்லேலூயா.
3. பெண்கள் ஞாயிற்றுக்கிழமை
விடியற்காலம் கர்த்தரைக்
கெபியில் பார்க்க வரவே,
முன்தான் எழுந்திருந்தாரே.
அல்லேலூயா.
4. கெபியைத் தூதன் காண்பித்து,
அங்கில்லை வெற்றியாயிற்று,
உயிர்த்தெழுந்தாரென்று,
போய் அறிவியுங்கள் என்றான்
அல்லேலூயா.
5. இரண்டு சீஷரோடன்றே
வழியில் கர்த்தர் பேசவே,
பேரின்பம் மூண்டு, பிறகு
யாரென்ற்றியாயிற்று.
அல்லேலூயா.
6. அந்நாளில் சீஷர் கர்த்தரின்
தரிசனையைப் பார்த்தபின்
துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்
சந்தோஷப் பூரிப்பாயிற்று.
அல்லேலூயா.
7. இச்சிம்சோன் துஷ்ட சிங்கத்தை
ஜெயித்ததின் அரண்களைத்
தகர்த்துப்போட்ட ப்ராக்ரமர்,
அத்தால் நாம் நீங்கலானவர்.
அல்லேலூயா.
8. மூன்றே நாளாய் மீன் யோனாவைப்
பிடித்திருந்த்திவரை
அதிக்க் காலமாய்ய் குழி
அடைத்திருப்பதெப்படி?
அல்லேலூயா.
9. சாவால் விழுங்கப்பட்ட பின்
அவர் தெய்வீக ஜீவனின்
பலத்தால்சாவைப் போக்கினார்;
மாண்டோருக்கும் உயிர் ஈவார்.
அல்லேலூயா.
10. எகிப்துக்கின்று நீங்கினோம்.
சிறையிருப்பு தீர்ந்துபோம்;
ராப்போஜனத்தில் கிறிஸ்து தாம்
நாம் உண்கிறமெய்ப்பஷாவாம்.
அல்லேலூயா.
11. பளிப்பில்லாத அப்பமாம்
சன்மார்க்க போதகத்தை நாம்,
வழங்கிக் கொண்டிருக்கின்றோம்
புளித்த மாவைத் தள்ளுவோம்.
அல்லேலூயா.
12. சங்காரன் கிறிஸ்துதோழத்தில்
உள்யோரைத் தொடான்; ஏனெனில்
நாம் தப்ப அவர் ரத்தமே
நம்மை விலக்கிக் காக்குமே.
அல்லேலூயா.
13. ஆகாயம் பூமி பொழுதும்
முன்துக்கமாம் சிருஷ்டியும்
சாத்தான் இத் திருநாளிலே
விழுந்ததால் மகிழுமே
அல்லேலூயா.
14. ஆ, எங்கள் ஆறுதலுக்கே
எழுந்த இயேசு கிறிஸ்துவே,
ஜெயித்த உமக்கென்றைக்கும்
மாதோத்திரம் உண்டாகவும்.
அல்லேலூயா.
N. Hermann, †1561.