66. சூரியன் அதிகாலையில்

1. சூரியன் அதிகாலையில்
ப்ரகாசத்தோடு டுதிக்கையில்
என் மீட்பர் இயேசு ஆண்டவர்
உயிர்த்தெழுந்திருக்கின்றார்.
அல்லேலூயா.

2. என் மனம் துன்ப ராவினில்
கலங்கிக் கொந்தளிக்கையில்
விடியுங்காலப் பொழுதே
புது வெளிச்சம் வீசுமே.
அல்லேலூயா.

3. மூன்றே நாளாய் என் இரட்சகர்
சாவில் அடைக்கப்பட்டபர்
மூன்றாம் நாள் வெற்றி வேந்தராய்
விளங்கினார் ப்ரஸ்தாபமாய்.
அல்லேலூயா.

4. இவ்வுலகில் நான் சிலுவை
இகழ்ச்சி நிந்தை துன்பத்தைச்
சகித்தபின் கிடைக்குமே
நல்லோய்வு கல்லறையிலே.
அல்லேலூயா.

5. அதில் என்றைக்கும் ஓய்ந்திரேன்
எழுந்தென் மீட்பரைக் காண்பேன்
சாவெனக்கினி நஷ்டமோ?
அது ஆதாயம் அல்லவோ
அல்லேலூயா.

6. அவர் பிழைத்திருக்க, என்
மனம் துக்கித்து நிற்கிறேன்;
களைப்பை எல்லாம் ஆற்றவார்,
நெஞ்சைக் குளிரப்பண்ணுவார்
அல்லேலூயா.

7. காப்பாற்றித் தாங்கிப் போஷிப்பார்.
சாகையில் தம்மண்டை சேர்ப்பார்.
தலையாம் இயேசு எங்கேயோ
அங்கே இருப்பேன் அல்லவோ.
அல்லேலூயா.

8. அப்போ நான் தூதருக்கொப்பாய்
இருப்பேன் மெய்மகிழ்ச்சியாய்;
பிதா பிரிய மைந்தனார்
நிமித்தம் என்னை நேசிப்பார்.
அல்லேலூயா.

9. இந்தப் பெரிய ரட்சிப்பைக்
கண்ணோக்கி இயேசு ஸ்வாமியை
வணங்கித் தோத்திரிக்கிறோம்,
என்றைக்கும் போற்றிப்பாடுவோம்.
அல்லேலூயா.

J. Hermann, † 1647.