67. நாம் செய்த கன பாவத்தால்

1. நாம் செய்த கன பாவத்தால்
கொடூர சாவின் கட்டில்
விழுந்த கிறிஸ்து மூன்றாம் நாள்
எழுந்து, நம்மிடத்தில்
கொண்டு வந்தார் ஜீவனை;
மகிழ்ந் தெல்லாரும் அவரைத்
துதித்துத்தோத்திர்ப்போம்.
அல்லேலூயா.

2. புவியில் சாவு யாராலும்
விமோசனமாகாது.
ஏன் பாவத்தாலே முழுதும்
நாம்கெட்டோம் சீர் காணாது.
பாவம் நம்மைச் சாவுக்கு
இரையாய் ஒப்புவித்தது;
கிறிஸ்தோ பலத்த மீட்பர்.
அல்லேலூயா.

3. ஒன்றான தேவ புத்திரன்
நரரை மீட்போமென்று
மரித்துயிர்த்து, நம்முடன்
இருந்த சாவை வென்று,
அதை ஞாயந் தீர்த்தாரே.
அதிப்போ வெறும் வேஷமே.
கூர் நம்மைக் கொல்ல எங்கே.
அல்லேலூயா.

4. தேவாட்டுக் குட்டியாகிய
மெய்ப்பஷா கிறிஸ்துவாமே.
தெய்வன்பின் தீயால் உயர
மரத்தில் சுட்டதாமே
அதன் ரத்த முத்திரை
அடைந்த விசுவாசியைச்
சங்காரன் தொடமாட்டான்.
அல்லேலூயா.

5. மகிழுவோம், இவ்வுன்னத
பஷாவின் நாள் இன்றாமே
உதித் தருள் நிரம்பிய
பகலோன் கர்த்தர் தாமே.
ஒளி உண்டு பண்ணினார்,
மனம் ப்ரகாசிப்பிக்கின்றார்.
கழிந்ததே ராக்காலம்.
அல்லேலூயா.

6. புதிய மா ஆகாரமாய்
பஷாவை ஆசரிப்போம்;
அருளின் வார்த்தைக்காசையாய்
புளித்த்தைக் கழிப்போம்;
கிறிஸ்து தாமே போஜனம்
வேறெதினாலும் ஆத்துமம்
பிழைக்கவே மாட்டாது.
அல்லேலூயா.

Martin Luther, † 1546.