1. தேவ மைந்தனான
இயேசு பலமான
வல்லமையினால்
சாவின் கட்டொழித்து,
கல்லறையைவிட்டு
தாம் எழுந்ததால்
பெரிய பயங்கர
சத்துருக்களை ஜெயித்தார்,
நம்மையோ ரட்சித்தார்.
2. நாம் அடைவதான
மிக்க பாரமான
சாபம் நீங்கவும்,
நமக்கு ரட்சிப்பும்
நித்திய கெலிப்பும்
தேடுவதற்கும்,
அவரே மரத்திலே
அறையுண்டு, அவர் தாமே
கொல்லப்பட்டோராமே.
3. பாவங்களுக்காக
இந்த விதமாக
தெய்வ நீதிக்குத்
தாழ்ச்சி ஒன்றுமற
அவர் சரிவர,
தீர்த்த பிறகு
இப்போதும் நாம் தான் இன்னும்
தீர்க்கத் தக்க கடனென்ன
அதில் மீதி என்ன.
4. கிருபைக்குள்ளான
நம்மைக் கொல்வதான
எதுவும் உண்டோ;
பேய் மிரட்டினாலும்
அதன் சீறல் மாளும்;
ஏனென்றால், இதோ,
திகிலும் நடுக்கமும்
பேய்க் குண்டாக்குங் கிறிஸ்து தாமே
நம்மைச் சேர்ந்தோராமே.
5. உனது கெடியும்
அற்றுப்போய் அவியும்,
நரகத் தீயே;
எங்கள் பிணையான
இயேசுவுக்குண்டான
வாதை நீங்கிற்றே,
மிகவும் நீ வாதித்தும்
தீர்ந்ததே, அத்தாலே நாங்கள்,
என்றுஞ் சுகவான்கள்.
6. கொல்ல ஆசையாக
சாவு எதிராக
நின்றும் நம்மிலே
அத்தால் பயமில்லை;
கிறிஸ்து அதன் வில்லை
வாங்கிப்போட்டாரே.
ஆகையால் சாவதினால்
மாறி, நமக்கங் குண்டாகும்
வாழ்வின் பாதையாகும்.
7. ஆகையால் நான் சாகும்
நாளின் பின் மண்ணாகும்
தேகமானது
இளைப்பாறத்தக்க
இடத்தில் கிடக்க
வேண்டயதற்கு,
பயம் ஏன் நான் அடைவேன்;
கல்லறையில் இயேசுதாமே
வைக்கப்பட்டோராமே.
8. கெட்ட லோகத்துக்குச்
செத்தே அவருக்கு
நாம் பிழைத்தோமே
அவருக்குள்ளான
நாம் அடக்கமான
பின் அவருக்கே
ஒத்தோராய் ஜெயித்தோராய்
நாமும் மண்ணை விட்டெழுந்து
வாழ்வடைவதுண்டு.
9. கல்லறைக் குள்ளான
மத்தியஸ்தரான
சிரசல்ல்வோ
அதிலேயிருந்து
உயிரோடெழுந்து
வந்தாரே; இப்போ
சகல தம்முடைய
நல்லவயவங்களுக்கும்
ஜெயமே யிருக்கும்.
10. இப்படி நாம் சென்ற
பின்பு வாழ்வோமென்ற
நிச்சயம் உண்டே
ஆகையால் பழைய
சட்டையைக் களையப்
போவோ மென்பதே
நமது மகிழ்ச்சிக்கு
ஆனது பிற்பாடுண்டாகும்
ரூபும் புதிதாகும்.
P.J. Spener, † 1705.