69. கிறிஸ்தவர்களே, நாம் பாடி

1. கிறிஸ்தவர்களே, நாம் பாடி,
கர்த்தரை அனைவரும்
மிகுதியுமாய்க் கொண்டாடி,
போற்றுவும் துதிக்கவும்
கடவோம். இதோ ஜெயித்தார்,
அவர் பலசாலியாய்
பரம சிம்சோனுமாய்
யார் எதிர்க்காலம் இனி
கிறிஸ்தின் சங்கமே, களி.

2. சிலுவையில் ஜீவனற்று
மாண்டு, கல்லறையிலே
வைத்தடக்கம் பண்ணப்பட்டுப்
போனவர் எழுந்தாரே.
மரணத்தைப் பாழ்க்கடித்தார்;
சாத்தான் கடுங்காவலில்
வைத்த நம்மை மீட்டதில்
அவன் கோட்டையை அழித்தார்
அவரே அதிபதி,
கிறிஸ்தின் சங்கமே, களி.

3. கல்லறையில் நீர் இராமல்,
தேவ மைந்தனான நீர்
மாண்டும், அழிவைக்காணாமல்,
மீண்டும் வந்திருக்கின்றீர்.
மண் அதிர்ந்த்து களிப்பாய்,
அழியாத ஜீவனே.
சாவைக் கொள்ளையிட்டீரே.
நீர் நரருக்கு ரட்சிப்பாய்
வென்ற வெற்றி மிகுதி
கிறிஸ்தின் சங்கமே, களி.

4. சாவே உனது முள்ளெங்கே?
நரக பாதாளமே,
உமது ஜெயமும் எங்கே?
பேயின் வில்லுடைந்ததே.
கிறிஸ்து சாவுக்கு நஞ்சாமே;
அவர் நரகத்துக்கும்
பெருவாரிக் காய்ச்சலும்,
கேடும் வருவித்தோராமே.
அவர்க்கென்றைக்குந் துதி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

5. நமக்கு அன்பான கர்த்தர்
நம்முடைய வாதையை
நீக்குவதற்குச் சமர்த்தர்.
எங்கும் அனுகூலத்தை
நாம் காணாதபோது வந்தார்.
மூன்று நாளின் பிறகு
அவர் நம்மை நேசித்து,
எதிரிக் கவர்க் கெடி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

6. தெய்வ நீதிக்குக் கடனைத்
தீர்த்துயிர்த்தப் பிறகும்
இவர் ஜீவனின் பலனை
எவர் சொல்ல முடியும்.
கோடிக்குத் தலைக்கல்லானார்.
ஞானமுள்ள கர்த்தரே,
இதும்மாலே ஆயிற்றே.
பாவிகளின் நீதியானார்:
மோட்சத்துக்கவர் வழி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

7. தொய்யும்மட்டுக்கும் போரிட்ட
ப்ராக்ரமன் வழியண்டை
ஓடும் ஆற்றிலே குடித்தப்
பிறகு தன் சிரசை
ஏறெக்கும் வண்ணமாக
இயேசுவே தம்முடைய
சிரசை எடுத்தெல்லாம்
சத்துருவையும் நன்றாக
வெட்டின சேனாபதி,
கிறிஸ்தின் சங்கமே, களி.

8. கர்த்தரே, நீர் வெற்றியாக
உயிரோடெழுந்ததால்
நாங்கள் நீதிமான்களாக
நிற்கலாம்; அதேனென்றால்
சமாதானமும் மன்னிப்பும்
கிருபா கடாட்சமும்
சகல வரங்களும்
வாழ்வும் நித்திய ரட்சிப்பும்
நீர் எழுந்ததின் கனி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

9. இயேசுவே உம்மால் உண்டான
இந்தச் சமாதானத்தின்
பேரில் நித்தம் வாஞ்சையான
என்னுடைய மனத்தின்
தாகத்தை நீர் தீர்ப்பீராக
நீர் போராடினதினால்
தேடின பலன்களால்
இப்போதேழையை நன்றாகத்
தாங்கும் தயவின்படி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

10. எங்கள் கேட்மைத் துக்கமாக
நாங்கள் நோக்கி உம்மிலே
செத்துயிர்க்கும் படியாக
ஈவளியும், இயேசுவே
எங்கள் நெஞ்சில் நீர் உதித்து.
பாவம் சாபம் நரகம்
தீமைகள் வியாகுலம்
சகலத்தையும் ஜெயித்து,
எங்களிலிரும் இனி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

11. சாவு எனக்குச் சாவல்ல,
தேகம் மண்ணுக்குட்படும்,
ஆகிலும் என்றைக்குமல்ல,
கர்த்தர் அதை மீளவும்
தாம் இனி ப்ராதாபத்தோடே
வந்து; செத்தவர்களே,
எழும்புங்கள் என்கவே
உயிர்ப்பிப்பவர், அத்தோடே
என் இக்கட்டெல்லாஞ் சரி,
கிறிஸ்தின் சங்கமே, களி.

12. மண்ணுந் தூளுமாய் அழிந்த
என் அவயவங்களே
அழியமையைப் பெற்றிந்த
லோக சக்கரத்திலே
யாராலும் காணாதிருக்கும்
ஒளியாய் விளங்குமே
என் சரீரம். இயேசுவே
உமது சரீரத்துக்கும்
ஒப்பாம்; உமக்குத் துதி.
கிறிஸ்தின் சங்கமே, களி.

John.Rist. † 1677.