1. ஜெயித்த இயேசு ஸ்வாமியார்,
அல்லேலூயா,
இன்றே பரத்துக்கேறினார்.
அல்லேலூயா.
2. பிதாவின் பாகத்தில் அவர்,
அல்லேலூயா,
விண் மண்ணை ஆளும் அரசர்.
அல்லேலூயா.
3. தாவீது முன்னர் சொன்னது,
அல்லேலூயா,
அதிப்போ நிறைவேறிற்று.
அல்லேலூயா.
4. பிதாவோடே உட்கார்ந்தாரே,
அல்லேலூயா,
பகைஞர் கீழ்ப்படத்தானே.
அல்லேலூயா.
5. அத்தாலே ஆர்ப்பரிக்கிறோம்,
அல்லேலூயா,
களிப்பாய்க்கிறிஸ்தைப் போற்றுவோம்
அல்லேலூயா.
6. த்ரியேகருக்குத் தோத்திரம்,
அல்லேலூயா,
கனம் புகழ்ச்சி கீர்த்தனம்.
அல்லேலூயா.
Frankfurt † 1601.