1. மகிழ், கர்த்தாவின் மந்தையே,
இதோ கெம்பீரத்துடனே
பரத்துக்கு அதிபதி
போய் ஏறினாரே,தோத்திரி.
அல்லேலூயா.
2. பரத்தின் சேனை ஓசையாய்க்
கொண்டாடி, மா வணக்கமாய்
பணிந்து இயேசு சுவாமிக்கு
ஆராதனை செலுத்திற்று.
அல்லேலூயா.
3. கர்த்தாதி கர்த்தர் நமக்குத்
தலைவரானாரென்பது
பரத்தின் தூதருக்கெல்லாம்
விசேஷித்த சந்தோஷமாம்.
அல்லேலூயா.
4. தலத்தையும் நாம் என்றைக்கும்
மகிழும் பாக்கியத்தையும்
பிதாவின் வளவில் அவர்
போய் ஆயத்தப்படுத்தினர்.
அல்லேலூயா.
5. இனிக்கெடோம், அதேனென்றால்
கிறிஸ்தென்றரண்டாம் ஆதாமால்
பொல்லாப்பு பாவம் சாவு பேய்
எக்கேடும் வெல்லப்பட்டதே.
அல்லேலூயா.
6. தேவாவியை அவர் அன்பார்
அனுப்பி, நல்ல மேய்ப்பராய்
சபையை ஆதரிக்கிறார்,
போர் வந்தால், நம்மைக் கைவிடார்.
அல்லேலூயா.
7. ஆகையினால் வானோரைப் போல்
சந்தோஷமாகப் பாடுங்கள்.
துதியுந் தோத்திரங்களும்
த்ரியேகருக்குண்டாகவும்.
அல்லேலூயா.
8. அனாதியாம் பிதாவே, நீர்
இத்தன்மை தயவைச் செய்தீர்
என்றும்மை நித்தம் நித்தமும்
ரட்சிக்கப்பட்டோர்போற்றவும்.
அல்லேலூயா.
9. ஆ, இயேசு தேவ மைந்தனே,
கர்த்தா, பத்தா, தலைவரே,
அடியார் உள்ளம் உமக்கு
ஆதீனமாயிருப்பது.
அல்லேலூயா.
10. அன்புள்ள தேவ ஆவியே,
வெளிச்சம் வீசும் ஜோதியே,
நீர் எங்களோலே என்றைக்கும்
தோத்திரிக்கப்படவுமே.
அல்லேலூயா.
Erasm Alberts, † 1553.