1. என் மீட்பரான இயேசுவே,
நீர் ஆச்சரியமாகப்
பரத்துக்கேறினதற்கே
துதி உண்டாவதாக.
சபையின் சிரசான நீர்
உம்மண்டை என்னைனயுஞ்சேர்ப்பீர்
மகா இரக்கத்தாலே.
2. என் பொக்கிஷம் பரத்துக்கே
போய் ஏறினாதினாலே
அடியேனும் அவ்விடமே
என் நெஞ்சின் வாஞ்சையாலே
எழும்பிட ஏங்குகின்றேன்,
இவ்வுலகை வெறுக்கின்றேன்;
இதில் மெய் ஓய்விராது.
3. கர்த்தா, அடியேன் ஜெபத்தைக்
கேட்டருளுவீராக;
என் அற்ப விசுவாசத்தைப்
பலக்கச் செய்வீராக;
நான் மாளும்போதென் பயத்தை
அன்பாக நீக்கிமோட்சத்தைத்
தந்தென்னைச் சேர்த்துக் கொள்ளும்.
Josua Wegelin, † 1640.