78. ஆ, ஜீவனின் பிரபுவே

1. ஆ, ஜீவனின் பிரபுவே,
பரத்திலே உயர்ந்த
என் எங்கள்மேல் சுமந்த
கடனைத் தீர்த்து, எங்களை
ரட்சித்துத்கொண்டவெற்றியைத்
தினம் நான் ஒய்வில்லாதே
கொண்டாடியும், போதாதே.

2. நீர் பாவஞ் சாபஞ் சகல
தீமைகளையும் வெள்றீர்,
நீர் மாண்டதாலே மரணக்
கெடியையும் முறித்தீர்.
பிசாசும் லோகமும் உம்மால்
வெல்லப்பட்டதே, ஆகையால்,
நான் உம்மை வாஞ்சையாகத்
தினந் துதிப்பேனாக.

3. கெம்பீரத்தோடே தேவரீர்
எக்காளங்கள் தொனிக்க,
பரத்துக்கே போயேறினீர்.
பணிவுடன் துதிக்க,
வானோரின் சேனை உமக்கே
எதிர்கொண்டேகிப் போகுமே;
கர்த்தாவது ரதங்கள்
அநேகம் ஆயிரங்கள்

4. கொடூரமாய் அடியாரைக்
கெடுத்தலைக்கழித்து,
சிறை பிடித்தவர்களை
நீரே சிறை பிடித்துக்
கீழாக்கிப் போட்டீர், தேவரீர்
வெற்றிச் சிறந்து, ஏறினீர்.
ஆ, உம்மைப் பூரிப்பாக
நாம் தோத்திரிப்போமாக.

5. நீர் உன்னத பரங்களில்
அனைத்துக்கும் மேலாக
பிதாவின் வலக்பாகத்தில்
அடியார் நன்மைக்காக
உயர்ந்துட்காரலானீரே.
முடி தரித்த சிரசே,
எந்நாளும் ஆட்சி செய்வீர்,
பேய்ச் செயலைக் கெடுப்பீர்.

6. இப்போதுந் தேவரீருக்கு
எல்லாங் கீழ்ப்பட்டடங்கும்,
பரத்தின் சேனை உமது
ப்ரஸ்தாபத்தை முழங்கும்;
விண் மண் தண்ணீர் காற்றக்கினி
உமது கட்டளைப்படி
எச்சமயத்திலேயும்
பிழையில்லாமல் செய்யும்.

7. சபைக்குச் சிரசான நீர்
அவயவங்களான
அடியார்க் காதரவாவீர்,
இக்கட்டிலே உண்டான
திகிலால் எங்கள் நெஞ்சுகள்
துடித்தால், எங்கள் ஆறுதல்
நீர், ஸ்வாமி, நீர் ரட்சிப்பீர்,
மகிழ்ச்சியும் அளிப்பீர்.

8. நீர் உம்முடைய ஆவியை
அடியார் மேலே ஊற்றி,
ரட்சிப்பின் நல்லசெய்தியைப்
பசியுள்ளோருக்கூட்டி;
மனந்திருப்பும் பாவியைச்
சேர்த்தும்முடையவர்களை
அன்பாய் ஆசீர்பதிப்பீர்.
முடியவும் ரட்சிப்பீர்.

9. பரத்துகேறி, தேவரீர்
வழியை எங்களுக்கும்
அத்தாலே உண்டுபண்ணினீர்,
உம்மால் திறந்திருக்கும்;
அடியார் அங்கே போக நீர்
வழியுமாயுருக்கிறீர்;
நீர் மோட்ச வாசல் மட்டும்
அடியாரை நடத்தும்.

10. சபைக்குச் சிரசான நீர்
மோட்ச இராச்சியத்தில்
சிறக்பாய் உட்ப்ரவேசித்த
படியால் உம்மிடத்தில்
உம்மால் மீட்டுக்கொள்ளப்பட்ட
அவயவங்களும் வர
மகா இரக்காகச்
சகாயஞ் செய்வீராக

11. அடியார் மனம் உமது
பரகதியைத் தேடி,
எப்போதும் அங்கே உயர
உம்மண்டைதானே ஏறி,
உம்மோடே சஞ்சரித்தெல்லா
நற்சீரிலுந் திடப்பட,
நீர் அதை நித்தமாக
எழுப்பி யாள்வீராக.

12. புவியில் நாங்கள் ஒன்றையும்
கதியும் பங்குமாக
எண்ணாமல், மாய்கையாவுக்கும்
மரித்தவர்களாக
இவ்வழுகையில் பள்ளத்தைக்
கடந்துபோய், பன்னானதை
மறந்தவ்வூரை நாடும்
இருதயத்தைத் தாரும்.

13. உம்மண்டை சேர எங்களை
இழுத்துக்கொள்வீராக;
அடியார் ஆவி உம்மண்டை
எழும்பிப் போவதாக;
எப்போதடியேன் என்றைக்கும்
மகிழுங் காலங்கள் வரும்
கர்த்தவைத் தரிசிக்கும்
அந்நாள் எப்போதுதிக்கும்.

14. என் இயேசுவே, உம்மண்டையில்
எப்போ நான் வந்திருப்பேன்;
நான் பரதீசின் தோட்டத்தில்
எப்போ கனி அறுப்பேன்,
இப்பள்ளத்தில் தவிக்கிறேன்,
பரத்தில் என்னைச்சேருமேன்,
என் ஆவி உம்மை நாடும்;
ஆ, என் பத்தாவே, வாரும்.

J. Rist,  †1667.