1. ஆ, இயேசுவே,
புவியிலே
இருந்திரக்கமாக
அடியாரை
அங்கும்மண்டை
இழுத்துக்கொள்வீராக.
2. இழும், இழும்,
அடியார்க்கும்
பரகதி அளியும்;
அப்போதெல்லா
உபத்ரவ
வருத்தமும் முடியும்.
3. நீர் எங்களை
சேர்த்தும்மண்டை
போம் பாதையில் நடத்தும்;
அடியார் கால்
தப்பாய்ப் போனால்
நீர் மோசத்தை அகற்றும்.
4. இவ்வுலகம்
ஆகா இடம்
இழும்; அடியார் தேடும்
இடம் பரம்;
அங்கும்மிடம்
நீர் கொண்ட பேரைச் சேரும்.
5. நீர் ரட்சகர்,
நீர் மீட்டவர்
நீரே இம்மானுவேலும்,
இரட்சியும்,
இழும், இழும்;
இவ்வேண்டுதலைக் கேளும்.
L.Elisabeth Von Schwarzburg Rudolstadt, †1672.