1. ஆ, இயேசுவே, நாம்வானத்தில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லோரையும் நம்மண்டைக்கே
இழுத்துக்கொள்வோமென்றீரே.
அல்லேலூயா.
2. நீர் எங்களை இழுக்கையில்
அடியார் ஆவி எங்களில்
எழுப்பி மண்ணைவெறுத்தே
பரகதிக்குப் போகுமே
அல்லேலூயா.
3. ஆனாலும் இங்கே உம்முடன்
உபத்ரவப் படாதவன்
உம்மோடே அங்கேவாழ்ந்திரான்,
சகித்தோனே மகிழுவான்
அல்லேலூயா.
4. நீர் காட்டிப்போன பாதையை
விலகிப்போனார் உம்மண்டை
சேரார்கள்; சேர்பவர்களார்,
பின் சென்ற தெய்வ மார்க்கத்தார்
அல்லேலூயா.
5. பின் செல்பவனைக் கைவிடீர்,
நீர் அவனை நடத்துவீர்,
நீர் அவனுக்குப் போதகர்,
கைலாகையுங் கொடுப்பவர்
அல்லேலூயா.
6. அநேகம் பாடும் துக்கமும்
இங்கவனுக்குண்டாகியும்,
அங்கும்மைப் பரதீசிலே
களிப்பாய்த் தரிசிப்பானே.
அல்லேலூயா.
7. இருப்பிடத்தைத் தேவரீர்
அங்காயத்தப் படுத்தி
அம்மகிமையில் நீதியர்
இக்கட்டும் நோவுமற்றவர்.
அல்லேலூயா.
8. அனந்த வாழ்வை அங்கே நீர்
அவர்களுக்கு நேமித்தீர்,
அவர்கள் உள்ளம் உமக்கு
இப்போதுந் தரப்பட்டது.
அல்லேலூயா.
9. அவர்கள் பேரில் நித்தம் நீர்
கிருபையாயிருக்கிறீர்;
அனந்த பாக்கியத்துக்கு
இது துவக்கமானது.
அல்லேலூயா.
10. பிதாவின் வலப்பாகத்தில்
நீ வீற்றுக்கொண்டிருக்கையில்
இங்கும்மைத் தேடினோர்க்கும் நீர்
சமீபமாயிருக்கிறீர்.
அல்லேலூயா.
11. பரத்திலும் புவியிலும்
சகல அதிகாரமும்
உயர்ந்த தேவரீருக்கே
கொடுக்கப்பட்டிருக்குமே.
அல்லேலூயா.
12. மனிதரே, கீழானதைக்
களைந்து அவர் வார்த்தையைக்
கேட்டேற்றுக் கொள்ளுங்கள்
மெய்யான செல்வமுமுண்டே அங்கே
அல்லேலூயா.
13. இதயத்தையுங் கண்ணையும்
அவரண்டைக்கெந்நேரமும்
உயர்த்தி அவர் சீடர்போல்
பரத்தை நோக்கிப்பாருங்கள்
அல்லேலூயா.
14. அத்தாலே பாக்கியம் வரும்.
அத்தாலே துக்கம் விலகும்.
யார் இயேசுவுக்குள்ளானானோ
அவன் பிழைத்தவன் அல்லோ.
அல்லேலூயா.
E.Lange. †1727.