1. கர்த்தாவின் தூய ஆவியே,
நீர் எங்கள் ஆத்துமத்திலே
இறங்கி வாசம் பண்ணும்,
பர வெளிச்சமாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சுங் கண்ணும்
தந்து, வந்து,
மெய்ஜெபத்தை நற்குணத்தைப் போதிவியும்
மெய்மகிழ்ச்சியை அளியும்.
2. நீர் போதிவிக்கும் வார்த்தையே
எப்போதும் எங்கள் நெஞ்சிலே
தீயாய் எரிவதாக
பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அத்தால்
த்ரியேக தேய்வமாக
நல்ல, வல்ல,
பத்தியோடும் பணிவோடும் போற்றிப்பாடும்
வாக்கை எங்களுக்குத் தாரும்.
3. நல்லோர் அடைகிற எல்லா
மெஞ்ஞானத்துக்குங் காரணா,
நீர் எங்கள் மேலே வாரும்.
மற்றோருக்குஞ் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டுங் கல்வியை
நீர் எங்களுக்குத் தாரும்.
நாட்டில், காட்டில்,
தேசமெங்கும் பொய் அடங்கும் நாள் உண்டாக
உம்மால் மெய் பலப்பதாக.
4. வழித்துணையாங் கர்த்தரே,
நல்யோசனை அறியோமே,
நீரே வழியைக் காட்டும்.
எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும்
அளித்து முசிப்பாற்றும்,
வாரும், பாரும்,
கைசலித்துக் கட்டுவிட்டுப் போனயாவும்
சீர்ப்பட ஒத்தாசை தாரும்.
5. பொல்லாத சத்ருக்களை
எப்போதும் வெல்லும்வல்லமை
குறையற உண்டாக.
நீர் எங்கள்மேல், நற்றைலமே,
இறங்கி, சேவகத்திலே
முனை கொடுப்பீராக.
தேற, ஏற,
கண்ணெடுக்கும் யாவருக்கும் நவமாக
ஆறுதல் அளிக்பீராக,
6. ஜீவாவி, நாங்கள் இயேசுவின்
பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து,
ரட்சிப்பின் நீளம் அகலம்
சிநேக ஆழம் உயரம்
எதென்றுணர்வடைந்து, என்றறியும்
பாவம், சாபம்
வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
திட நிச்சயம் அளியும்.
7. பரத்தின் மதுரப் பனி,
நீர் எங்கள் உள்ளத்துருகி
அன்பால் நிரம்பப் பண்ணும்.
சகோதரர் ஒன்றாகிய
சிநேகத்தைக் கெடுக்கிற
பொறாமையும் வன்கண்ணும் நேசக்கட்டும்
வாடி, மாறி,
நல் இணக்கம் மெய் இரக்கம்
சாந்தம் அன்பும் வளரட்டும்.
8. கற்போடே எங்கள் நாட்களை
நடத்த எங்கள் ஆவியைப்
பலப்படுத்தி வாரும்;
பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அதடியாரை
விடந் தீண்டாதே காரும்
ஆன, வான,
வாழ்வை நாஞ்சீரைத்தாரும் மோட்சங் காட்டும்
அத்தால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.
Mich. Schirmer, † 1673.