82. இறங்கும், தேவ ஆவியே

1. இறங்கும், தேவ ஆவியே,
அடியார் ஆத்துமத்திலே
பரவரத்திரளை ஊற்றும்,
தெய்வன்பின் தீயை அதில் மூட்டும்
நீர்வீசும் ஜோதியால் அன்பாய்
எல்லா நாட்டாரையும் ஒன்றாய்
மெய்விசுவாசத்திற்குச் சேர்க்கும்
தயைக்குத் தோத்திரங்கள் ஏற்கும்
அல்லேலூயா, அல்லேலூயா.

2. பரத்தின் துய்ய ஒளியே,
உம்மால் பராபரனையே
அறிந்தப்பா என்றுண்மையாக
அழைக்க நன்றாய்க் கற்போமாக.
அடியார் இயேசு கிறிஸ்துவை
அல்லாமல் வேறே மேய்ப்பரைத்
தேடாமல், அவர்மேல் எல்லாரும்
மா பக்தியாயிருக்கத் தாரும்
அல்லேலூயா, அல்லேலூயா.

3. அனல் பலமுமாகிய
நல்லாவியே உம்முடைய
வசத்தில் திடமனதாக
இக்கட்டிலுந் தரிப்போமாக.
பிழைப்பிலும் இறப்பிலும்
அடியார் வெற்றியாய்ப் போராடும்
துணிவை எங்க்ளுக்குத் தாரும்
அல்லேலூயா, அல்லேலூயா.

 M. Luther, †1546.