83. அடியார் நெஞ்சைத் தயவாய்

1. அடியார் நெஞ்சைத் தயவாய்
நிரப்பி அதை உமக்கே
பொருத்தும் அலங்காரமாய்
படையும், தேவ ஆவியே.

2. மெய்த் தேற்றரவளிக்கிற
பர ஈவாயிருக்கிறீர்;
வானாபிஷேகமாகிய
ஜீவாறும் நேசத் தீயும் நீர்.

3. பல வரம்  வழங்கிய
நீர் தம்பிரானது விரல்;
தெய்வீக சொல் புறப்பட
உம்மால் படியும் மொழிகள்.

4. வெளிச்சந் தாரும், அறிவில்
மெய்யன்பை நெஞ்சிலே கொடும்;
சதையின் பலவீனத்தில்
பலம் உண்டாக்கியருளும்.

5. அடியார் எச்சரிக்கையாய்
நீர் ஏவும்போல் நடக்கவே,
பிசாசின் சூதைத் தூரமாய்
விலக்கம், மனவாசரே.

6. பிதா சுதனையும் நன்றாய்
அறிந்து அண்டிக்கொள்ளவே,
நீர் எங்கள் தெய்வ குருவாய்
இரும், இருவர் ஆவியே.

7. த்ரியேக தெய்வமாகிய
பிதா குமாரன் ஆவிக்கும்
இப்போ தென்றைக்குஞ் சகல
புகழ்ச்சியும் உண்டாகவும்.

M. Luther, †1546.