84. வாரும் தெய்வ ஆவி வாரும்

1. வாரும் தெய்வ ஆவி வாரும்,
எங்கள் ஆத்துமத்திலே
எங்களுக்குயிரைத் தாரும்,
வாரும், தூய ஆவியே,
உம்முடன் வெளிச்சமும்
சீருஞ் ஜீவனும் வரும்.

2. எங்கள் நெஞ்சிலே நற்புத்தி
தெய்வ பயமும் வர
அதை நீர் குணப்படுத்தி,
தப்பு நினைவாகிய
யாவையும் அதில் நீரே
நீக்கும், தேவ ஆவியே.

3. மோட்சத்தின் வழியைக்காட்டி
சகல தடையையும்
நீக்கி, எங்களைக் காப்பாற்றி,
நல்லோராக்கியரும்.
கால் இடறிற்றேயாகில்,
துக்கம் தாரும் மனத்தில்

4. நாங்கள் தெய்வமைந்த்ரென்று
நீரே தீங்கு நாளிலும்
சாட்சிதந்து தீயோன் வென்று,
நெஞ்சைத் தேற்றியருளும்,
தெய்வ அன்பின் தண்டிப்பு
எங்களுக்கு நல்லது.

5. எங்களைப் பிதாவிடத்தில்
முழுப் பக்தியோடேயும்
சேரப்பண்ணி ஆத்துமத்தில்
நீருங் கூப்பிட்டேயிரும்;
அப்போ கேட்டது வரும்,
நம்பிப்பையும் பெருகும்.

6. மனமெங்களில் கலங்கி
ஸ்வாமி எந்த மட்டுக்கும்
என்று கெஞ்சும் போதிரங்கி,
அதை ஆற்றிக்கொண்டிரும்.
நிற்கவுந் தரிக்கவும்
நீர் சகாயராயிரும்.

7. ஆ, நிலைவரத்துக்கான
சத்துவத்தின் ஆவியே
பேயின் சூதுக்கெதிரான
ஆயுதங்களை நீரே
தந்து நாங்கள் நித்தமும்
வெல்லக் கட்டளையிடும்.

8. விசுவாசத்தை அவிக்க
சத்துருக்கள் பார்க்கவே
அதை நீர் அதிகரிக்கப்
பண்ணும், தேவ ஆவியே,
நாங்கள் பொய்யைப் பார்க்கிலும்
தெய்வ்வாக்கை நம்பவும்.

9. சாகுங்காலம் வந்தால்,
நாங்கள் நித்திய மகிழ்சிசியாய்
வாழப்போகும் மோட்சவான்கள்
என்றப்போ விசேடமாய்
நிச்சயத்தை நெஞ்சிலே
தாரும், நல்ல ஆவியே.

H.Held, † 1659.