1. பிதாவே, உமதாவியை
அன்பாய் அனுப்பும், அவரை
அடியார்க் கீவாய்த் தாரும்.
ஜெபத்தில் உம்மை ரட்சகர்
இவ்வீவைக் கேட்கச் சொன்னவர்
இவர் முகத்தைப் பாரும்.
2. இவ்வரத்துக்கு மனிதர்
அனைவரும் அபாத்திரர்;
நீர் தயவாய்க் கொடுக்கும்
தேவாவியின் வரம்மு
அன்புள்ள ரட்சகரது
சம்பாரிப்பாயிருக்கும்
3. சாத்தான் ஆதாமின் ஜாதியைக்
கெடுத்து, தெய்வச் சாயலை
எல்லாஞ் சமூலமாக
நரருக்குள் அழித்தது
இவ்வேழைப் பாவிகளுக்கு
இரக்கஞ் செய்வீராக.
4. கெட்டோம், நீரோ கடாட்சித்தீர்
விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்
இம்மீட்பை நாங்கள் பற்றும்
மெய்யான விசுவாசமும்.
புதிய நற்குணங்களும்
அடியாரில் வரட்டும்.
5. இப்புமுச் சீர் திறமற்ற
பாவிகளாம் எம்முடைய
பலத்தால் உண்டாகாது
நீர் இதை உமதாவியால்
அளித்துக்கொண்டிராவிட்டால்
அடியாரில் இராது.
6. மெய் விசுவாசம் அவரால்
கொளுத்தப்பட்டதேயானால்,
பொல்லாத லோகத்தார்கள்
பேயோடே கூட மிகவும்
அதை அவிக்கத் தேடியும்
வீணாய் எழுப்புவார்கள்.
7. தேவாவி வாசம் செய்கிற
இடத்தில் பரிபூரண
ஜெயம் உண்டாகியிருக்கும்;
பிசாசு கட்டிப்போட்டதை
அவருடைய வல்லமை
ஓர் நாழியில் நொறுக்கும்.
8. இருளில் தீய பலத்தை
முறித்து, ஏழை மனத்தைச்
சுகப்படுத்தி வந்தார்;
புயலின் மப்பு வருகில்
காப்பாற்றித் தேற்றி, உள்ளத்தில்
நிலைவரத்தைத் தந்தார்.
9. கசப்பைத் தித்திப்பாக்குவார்,
இருட்டில் ஜோரிகாண்பிப்பார்
நல்லாறுதலைச் சொல்வார்.
மந்தாரமான ராவிலே
நாம் நம்பி சுகத்துடனே
இருக்கக் காத்துக்கொள்வார்.
10. கர்த்தாவுக்குப் பயப்பட
எழுப்பி, சுத்தமாகிய
இதயத்தில் தரிப்பார்
பணிந்து தாழ்ந்து மனத்தைத்
திருப்பிக் கொள்பவர்களைத்
தெரிந்தாசீர்வதிப்பார்.
11. தினம் நாம் சாகுமட்டுக்கும்
நம்மோடவர் சகாயரும்
துணையுமாய் நிலைப்பார்.
நாம் சாவின் பள்ளத்தாக்கிலே
உட்படுகில், கேடின்றியே
பரகதிக் கழைப்பார்.
12. இப்போதும் மா தயாபரா,
அடியார் உம்மைக் கேட்கிற
விண்ணப்பத்தை அளியும்.
நீர் பரிசுத்த ஆவியைத்
தந்தவராலே எங்களை
அன்பாய் ஆசீர்வதியும்.
P. Gerhardt. † 1676.