86. மெய்யான விசுவாசத்தைத்

1. மெய்யான விசுவாசத்தைத்
தந்து, வாழ்வில் சாவில் எங்களைக்
காத்துவர நாங்கள் உட்கருத்தாக
இப்போ தேவரீரை வேண்டிக் கொள்வோமாக.
தேவாவியே.

2. வெளிச்சமே, ஒளிவிடும்,
இயேசுவை நன்றாய் அறிவியும்,
மோட்சத்தைத் திறந்த அவர்க்குள்ளாக
நிற்க அடியார்க்குப் போதிவிப்பீராக,
தேவாவியே.

3. அன்பான ஆவி, நேசத்தால்
நாங்கள் ஒன்றுக்கொன்று உள்ள நாள்
ஏகசிந்தையாக இருந்தெல்லாரும்
கிறிஸ்துக்குள் ஒன்றாயிருக்கும் அன்பைத்தாரும்.
தேவாவியே.

4. இக்கட்டில் தேற்றும் ஆவியே,
நாங்கள் உம்மைத் தீங்குநாளிலே
நம்பி, சாவிலேயும் வதையிலேயும்
பயமற்றிருக்க நீர்சகாயஞ்செய்யும்.
தேவாவியே.

M. Luther, † 1546.