87. ஆனந்த மகிழ்ச்சிக்கான

1. ஆனந்த மகிழ்ச்சிக்கான
இன்பமுள்ள ஒளியே,
துக்க நாளிலும் அன்பான
ஆறுதலின் ஜோதியே,
யாவையும் அளவில்லாப்
பலமாய்த் தாங்குகிற
ஆவியே, இரக்கமாக
என் ஜெபத்தைக் கேட்பீராக.

2. யாவிலும் நீர் மேன்மையான
உன்னத வரமாமே;
நீர் இருந்தால், நெஞ்சுக்கான
பரிபூரணம் உண்டே.
வாரும், அதை நம்மையால்
நீர் நிரப்பும்; எனென்றால்
அது உமக்கு நீர்தாமே
முன்னே நேமித்த வீடாமே.

3. நீர் பிதா குமாரனாலும்
வந்திறங்கி, எங்களை
சகல வரங்களாலும்
நிறைவாக்கும் நல் மழை.
எனதாவி தேகமும்
உம்மால் பங்கிடப்படும்
ஈவுகளினால் நன்றாக
நிறைவாகிப் போவதாக.

4. சகலத்தையும் நீர் கண்டு,
யாவையும் அறிகிறீர்;
நீர் கடல்களை அளந்து,
மண்ணின் தூளை எண்ணினீர்
என் துர் நெஞ்நினுடையணும்
கேட்டையும் அறிகிற
ஆவி, என்னில் ஞானக்கண்
சற்குணமும் உண்டுபண்ணும்.

5. பரிசுத்தமாயிருக்கும்
தானத்தில் நீர் தங்குவீர்;
நாறும் ப்ரேதத்தை வெறுக்கும்
நற்புறாப் போலிருப்பீர்
சுத்தமான வெள்ளமே,
என்னில் பாய்ந்து, உமக்கே
ஏற்றிராததைக் கழியும்
ஏற்றதை நீர் விளைவியும்.

6. சாந்த சிந்தை உமக்குண்டு,
கெட்ட எங்களுக்கு நீர்
அன்பைக் காண்பித்தேயிருந்து,
நன்மை யாவுஞ் செய்கிறீர்
நீர் சிநேகித்தோனை நான்
பகைக்காமல், அன்பைத்தான்
யாவர் மேலுந் தயவாக
வைக்க ஈவளிப்பீராக.

7. என்னைத் தள்ளிப் போடீராக
என்று கெஞ்சிக் கேட்கிறேன்.
எனக்குள்ளே வாசமாக
நீர் நிலைத்தால் தேறுவேன்.
உம்முடைய சொந்தம் நான்,
உமக்குத் துதியாய்த்தான்
பரிசுத்தனாயிருந்து,
நன்மை செய்ய ஆசையுண்டு.

8. உமக்கு விரோதமான
யாவையும் வெறுக்கிறேன்.
உமக் கேற்றிருப்பதான
யாவையுந் தொடருவேன்.
சாத்தான் தூண்டுதலுக்கே
நான் எதிர்த்து நித்தமே
அதன் சூதைக் கவனிப்பேன்,
அதன் நயத்தைச் சபிப்பேன்.

9. உம்மால் அடியேன் பலக்க
என்னைத் தாங்கியருளும்;
என் நிர்ப்பந்த்த்துக்குத் தக்க
அனுகூலராயிரும்.
பழ நஞ்னைத்தையும்
என்னில் நீர் முறிக்கவும்,
ஸ்வாமிக்கென்மேல் அன்புண்டாக
புது சிஷ்டியாவேனாக.

10. நான்சிக்குண்டால், விடுவியும்;
விழப்போனால், ரட்சியும்;
செத்தால், என்னிலே தரியும்;
மண்ணானாலும், வைத்திரும்.
மீண்டும் நான் உயிர்க்கையில்
என்னைப் பரலேதகத்தில்
ரட்சகரின் அங்கமாகச்
சேர்த்தலங்கரிப்பீராக.

P. Gerhardt. †1676.