1. ரட்சிப்பின் தாகத்துடனே
தாழ்ந்தோரின் ஆத்துமத்தையே
நிரப்பித் தேற்றும், தேவ ஆவி;
ஆ, வாருமேன், நான் ஏழைப் பாவி,
அனலில்லாதிருக்கிற
என் நெஞ்சை உம் அன்புடைய
தீயால் எழுப்பிப் புதிதாக்கும்,
நீர் அதை உமது வீடாக்கம்.
அல்லேலூயா, அல்லேலூயா.
2. என் நெஞ்சுமண்ணின் நேசத்தால்
கட்டுண் லோக இச்சையால்
நிறைத்திருக்கிறதாகாதே,
உமக்கது வீடாயிராதே;
ஆ, அதன் கடிக்க் குணம்
கல்நெஞ்சைத் தேவரீர் நொறுக்கும்
அப்போது சீர் உண்டாயிருக்கும்
அல்லேலூயா, அல்லேலூயா.
3. தன் பாவத்தூக்கம் அதற்கு
விருப்பாய் இருக்கின்றது.
மெய்யான நன்மைக்குங் கதிக்கும்
பதிலாய் நஞ்சையே பிடிக்கும்.
தெய்வீக வார்த்தை அதற்கு
மறைபொருள் போலானது
ஆ, வாருமேன், வெளிச்சந்தாரும்
அப்போ பொல்லாக் குணங்கள் மாறும்.
அல்லேலூயா, அல்லேலூயா.
4. இருளுங் கேடுஞ் சகல
அழுக்குந் தூர்ந்திருக்கிற
இவ்வீட்டிலே நீர் வந்திறங்கும்.
பொல்லாப்பை நீக்கி, அதில் தங்கும்.
தெய்வீக மனத்தாபமும்
மெய் விசுவாசப் பக்தியும்
புதிய சிந்தையுமுண்டாக,
உபாயம் யாவும் பார்ப்பீராக,
அல்லேலூயா, அல்லேலூயா.
5. சீடர் நெஞ்சை நிரப்பின.
தேவாவியே, என்னுடைய
உள்ளத்தையும் நிரப்பித்தேற்றி
மெஞ்ஞானத்தின் விளக்கை ஏற்றி
என்னோடே வாசமாயிரும்;
அனைத்தையும் நடப்பியும்;
அப்போதென் சீர்திருந்தலாகும்
நற்சாகோபாங்கமும் உண்டாகும்.
அல்லேலூயா, அல்லேலூயா.
6. கர்த்தாவை நோக்கி உத்தம
கருத்தாய்க் கெஞ்சிக் கூப்பிட
எழுப்பும் ஆவி! நான் மன்றாடும்
அசதியாயிருக்கிறேன்.
அனலை என்னில் மூட்டுமேன்.
நீர் உன்னதவரம், நீர்தாமே
தீயாய் இறங்கினோருமாமே.
அல்லேலூயா, அல்லேலூயா.
7. நான் தேவப்பிள்ளை என்றதாய்
நீர் என்னில் திடச் சாட்சியாய்
பகர்த்து, என்னைஏவி வாரும்,
துரிச்சைக்கோ விலகிக்காரும்
நான் பிள்ளைப்பக்தியாய்; அப்பா
பிதாவே என்று கூப்பிட
கர்த்தாவின் நேசத்தை நன்றாக
என் நெஞ்சில் விஸ்தரிப்பீராக.
அல்லேலூயா, அல்லேலூயா.
8. ஆ, என்னை எந்தப் போரிலும்
பலப்படுத்திகருளும்,
நான் விசுவாச மார்க்கமாக
நடந்தெப்போதுத் வெல்வேனாக.
ஞானத்தின் தூய ஆவியே,
நீர் என் இருதயத்திலே
தெய்வீக ஞானத்தை அளியும்.
இப்பேதையை நீர்போதிவியும்.
அல்லேலூயா, அல்லேலூயா.
9. தேவாவியே, நான் உமக்கு
நான்றாய்க் கீழ்ப்பட்டு, பாவத்து
பலத்தை வென்றுட்கருத்தாக
மன்றாடத் துணை செய்தன்பாக
என் நெஞ்சில் சமாதானத்தைத்
தந்தென்னுடைய ஆவியைச்
சுத்திகரித்து, வெள்ளமாக
என் உள்ளமேங்கும் பாய்வீராக
அல்லேலூயா, அல்லேலூயா.
Just Henning Bohmer, † 1743.