1. தேவாவியாகிய கர்த்தரே,
கிலேசம் ஆற்றுந் தைலமே,
பிதா குமாரனாலும் நீர்
அனுப்பப்பட்டிறங்குவீர்
இறங்கும், பரம ஆவியே.
2. நீர் தெய்வ வசன நேசத்தை
விர்த்திக்கப் பண்ணி எங்களை
அதற்குக் கீழ்ப்படியவும்
பலமாய் ஏவிக்கொண்டிரும்.
இறங்கும், பரம ஆவியே.
3. இந்நெஞ்சை மெய் விசுவாசத்தால்
நிறையப்பண்ணும், ஏனென்றால்
யாராகிலுந் தன்னாலே தான்
சீர்ப்பட்டு விசுவாசியான்.
இறங்கும், பரம ஆவியே.
4. அடியார் உமது வார்த்தையால்
வெளிச்சம் பெற்று, அதனால்
பிதாவையுஞ் சுதனையும்
அறியக் கட்டளையிடும்.
இறங்கும், பரம ஆவியே.
5. நெருக்கமான வழியில் நீர்
சன்மார்க்கரை அழைக்கிறீர்;
உம்மாலே அதில் நாங்களும்
நடக்கவும் இருக்கவும்
இறங்கும், பரம ஆவியே.
6. எல்லா இக்கட்டிலுஞ் சாவிலும்
நீர் எங்களில் தரித்திரும்;
எப்போதுந் தேவரீருக்குக்
கனம் வரக்கடவது
இறங்கும், பரம ஆவியே.
Adr. Hinkelmann. † 1695.