90. எல்லாஞ் சிஷ்டித்த நமது

1.எல்லாஞ் சிஷ்டித்த நமது
தயாபர பிதாவுக்கு
அனந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்
பெலன் துதி தோத்திரம்
உண்டாருப்பதாக
பார்ப்பார்,
காப்பார்;
வல்லமையுங் கிருபையும் அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.

2.இந்நீசருக்கு மீட்பரும்
பத்தாவுமாஞ் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக
அல்லேலூயா! புகழ்ச்சியும்
அனந்த ராஜரிகமும்,
உண்டாயிருப்பதாக.
பாவம்,
சாபம்,
எந்தத்தீங்கும் அத்தால் என்றென்றைக்கம்
பாக்கியம் எல்லாங் கிடைக்கும்.
 
3.மனந் திரும்பி, எங்களை
பத்தாவாம் இயேசுவினண்டை
அழைத்து, நேர்த்தியாகச்
அல்லேலூயா! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக,
வான,
ஞான,
வாழ்வினாலுஞ் செல்வத்தாலுந், தேற்றி வந்தார்,
அதன் முன் ருசியைத் தந்தார்.

4.எல்லாச் சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அனந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்
பெலன் துதி தோத்திரமும்
உண்டாயிருப்பதாக.
ஆமேன்,
ஆமேன்,
அவர் அந்தம், அரும் அந்தம் பரிசுத்தம்
பரிசுத்தம், பரிசுத்தம்.

Barth. Crasselius. 1724.